வீரம் ரீமேக்’ன்னு தான சொன்னீங்க..? ஆனா என்னடா பண்ணி வெச்சுருக்கீங்க.. டீசரை பார்த்து கடுப்பான ரசிகர்கள்..!
Author: Udayachandran RadhaKrishnan26 January 2023, 11:00 am
இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் குமார் மற்றும் தமன்னா நடிப்பில் 2014ம் ஆண்டு வெளியான திரைப்படம் வீரம். தமிழில் வெளியாகி பெரிய வெற்றியடைந்த நிலையில், இந்த படம் தற்போது ஹிந்தி மொழியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக வலம் வரும் சல்மான் கான் அவர்கள் தான், இப்படத்தில் அஜித் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த ஹிந்தி ரீமேக்கை இயக்குனர் ஃபர்ஹாத் சம்ஜி இயக்குகிறார். இவர் பிரபல இசையமைப்பாளரும் ஆவார். ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் இப்படத்தில் பூஜா ஹெக்டே தமன்னா கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். மேலும் இப்படத்திற்கு Kisi Ka Bhai Kisi Ki Jaan என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது.
ஆனால் இந்த ட்ரைலரில் பார்க்கும் போது அஜித் நடித்த “வீரம்” திரைப்படத்திற்கும் இப்படத்திற்கு எந்த சம்மந்தமும் இல்லாதது போன்று இருக்கிறது. அப்படி இருக்கும் போது எப்படி இந்த படத்தை வீரம் படத்தின் ரீமேக் என்று சொல்லலாம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அஜித் நடித்து தமிழில் வெளியான “வீரம்” படத்தில் அஜித் முழுக்க முழுக்க கிராமத்து கதாபாத்திரமாக நடித்திருப்பார்.
Don’t Panic, Just a Veeram Remake.! pic.twitter.com/cSgbhx6kYV
— Saloon Kada Shanmugam (@saloon_kada) January 25, 2023
தமிழ் திரைப்படங்களை ஹிந்தி ரீமேக் செய்தாலே, ரசிகர்கள் கொதித்தெழுந்து விடுகின்றனர். அந்த வகையில், ஏற்கனவே நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியிருக்கும் “கைதி” ரீமேக் திரைப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் ஆதருப்தியை ஏற்படுத்திய நிலையில், சல்மான் கான் நடித்து வரும் வீரம் ரீமேக் ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
என்னடா Veeram remake னு சொல்லிட்டு ACP Arjun, Thookkudurai ய காற்றிங்க ? pic.twitter.com/j8OER7fnLv
— Chillax (@itz_chillax) January 25, 2023