சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?

Author: Selvan
22 December 2024, 3:44 pm

இரண்டு படங்களை ஒரே நேரத்தில் இயக்கும் முருகதாஸ்

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி ரொம்ப பிஸியாக வலம் வருகிறார்.அந்த வகையில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸுடன் இணைந்து SK-23 படத்தில் நடித்து வருகிறார்.

Sivakarthikeyan with AR Murugadoss

சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்திற்கு முன்பே,இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார்.இதற்கிடையில் ஹிந்தியில் சல்மான் கான் நடிக்கும் சிக்கந்தர் படத்தை இயக்க ஏ ஆர் முருகதாஸுக்கு வாய்ப்பு கிடைத்தது.

இதனால் சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்தார்.தற்போது மீண்டும் SK23 படப்பிடிப்பை தொடங்கியுள்ளார்.அதே சமயம் சல்மான் கானின் சிக்கந்தர் படத்தையும் இயக்கி வருகிறார்.இப்படி இரண்டு படங்களை மாறி மாறி டைரக்ட் பண்ணி வந்த நிலையில்,சல்மான் கான் நடிக்கும் சிக்கந்தர் படம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்க: சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!

இதனால் படத்தை விரைவில் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இருக்கிறார்.அதனால் அவரிடம் சல்மான் கான் ஒரு கண்டிஷன் போட்டுள்ளார்.நீங்கள் சிக்கந்தர் படத்தை முடித்த பிறகே,தமிழ்நாட்டில் சென்று மற்ற படத்தை இயக்க வேண்டும் என சொல்லியுள்ளார்.இதனால் தற்போதைக்கு SK23 படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயனும்,சுதா கொங்கரா இயக்கும் புறநானுறு படத்தில் மும்மரமாக நடிக்க இறங்கியுள்ளார் என்ற தகவல் வந்துள்ளது.

  • Mohanlal Empuraan Controversy பூகம்பமாய் வெடித்த ‘எம்புரான்’ சர்ச்சை..மன்னிப்பு கேட்ட மோகன்லால்..!