விஜய்க்கு ஓகே சொல்லி.. அஜித்துக்கு டாட்டா காட்டி.. கமல், ரஜினியை ஒதுக்கி வரும் பிரபல நடிகை..!
Author: Vignesh7 October 2023, 3:45 pm
தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித்குமார். துணிவு படுத்தினை தொடர்ந்து இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்திற்கான அறிவிப்புகள் சற்று தாமதமாகவே வெளியானது. இப்படத்தில் நடிகை திரிஷா பல ஆண்டுகள் கழித்து அவருடன் ஜோடியாக நடிக்க உள்ளார். அஜித்துடன் நடிக்க பல நடிகைகள் போட்டி போடும் நிலையில் டாப் இடத்தில் இருக்கும் ஒருசில நடிகைகள் அஜித்துடன் இதுவரை ஜோடி போடாமல் இருந்து வருகிறார்கள்.
அதில் முக்கியமானவர் நடிகை சமந்தா. சினிமாவில் அறிமுகமாகி 13 ஆண்டுகளில் இதுவரை விஜய்யுடன் கத்தி, தெறி, மெர்சல் போன்ற படங்களில் ஜோடி போட்டு இருந்தார். ஆனால், அஜித்துடன் ஜோடியாக நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
மேலும், ரஜினி, கமல் போன்ற முன்னணி மூத்த நடிகர்கள் படத்தில் கூட நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறார் சமந்தா. அதே போல் நடிகை கீர்த்தி சுரேஷ் விஜயுடன் சர்க்கார், பைரவா படங்களில் நடித்தார். ஆனால், அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. இவர்களை போல் நடிகை அமலாபால், ஸ்ரேயா சரண், ஆண்ட்ரியா போன்ற நடிகைகள் அஜித்துடன் இன்று வரை நடிக்காமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.