பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நாகசைதன்யா.. மோசமடைந்த உடல்நிலையால் மருத்துவமனையில் அட்மிட் ஆன சமந்தாவுக்கு மீண்டும் இப்படி ஒரு பிரச்சனையா..?

Author: Vignesh
23 November 2022, 5:00 pm

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. இப்படத்தினை தொடர்ந்து பாணா காத்தாடி ஆரம்பித்து காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வரை முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து, முன்னணி நடிகையாக தென்னிந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறந்து வந்தார்.

Samatha-updatenews360-3

இடையில் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 4 ஆண்டுகள் வாழ்ந்து வந்த சமந்தா கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். அதன்பின் புஷ்பா பட குத்தாட்டம், கிளாமர் போட்டோஷூட் என்று சுதந்திர பறவையாக மாறியிருக்கிறார். இதன்பின் பாலிவுட் வரை சென்ற சமந்தா யசோதா, சகுந்தலம், குஷி மற்றும் பாலிவுட் படம் என்று பிஸியாக இருந்து வந்தார்

samantha -updatenews360-2

இதற்கிடையில் தனக்கு மயோசிடிஸ் என்ற அரியவகை நோய் இருப்பதால் கடினமான சூழலில் இருப்பதாக ஒரு பதிவினை பதிவிட்டிருந்தார். இதன்பின் யசோதா படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றும் வருகிறது.

samantha - updatenews360-1

இந்நிலையில் சமந்தாவின் உடல்நிலை மோசமடைந்ததால் ஹைதராபாத்தில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெலுங்கு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். கஷ்டங்களுக்கு நடுவில் அதிலிருந்து மீண்டு வருகிறேன் என்று சமந்தா சமீபத்தில் கூட பேட்டியளித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபடிருப்பது ரசிகர்களிடையே வருத்தத்தை கொடுத்துள்ளது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 803

    8

    5