அவசர சிகிச்சையில் சமந்தா… அதிர்ச்சி பதிவால் ரசிகர்கள் வேதனை!
Author: Rajesh15 January 2024, 12:10 pm
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா தற்ப்போது பாலிவுட் படங்களில் கூட கவனம் செலுத்தி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா உலகில் உச்சத்தை தொட்டவர் நடிகை சமந்தா.

சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.

இந்நிலையில் சமந்தா அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அவரது ரசிகர்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. இது குறித்த அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், பூக்கள் எவ்வளவு அழகானது என்று அவற்றை பார்த்தால் மனதுக்குள் இனம் புரியாத சந்தோஷம் வரும். ஆனால், பூக்களால் உங்களுக்கு அலர்ஜி ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவது கொடுமை… பூக்கள் என்றால் யாருக்கு ஒத்துக்கொள்ளாது? என்று கேள்வியும் எழுப்பியுள்ளார். சமந்தாவின் இந்த பதிவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் அவசர சிகிச்சையில் இருக்கீங்களா? உங்களுக்கு என்ன ஆச்சு/ என அக்கறையுடன் கேட்டு வருகிறார்கள்.