டார்ச்சர் பண்ணுறா.. கதறி அழும் பாடகி சின்மயி வைரலாகும் வீடியோ..!

Author: Vignesh
24 July 2024, 5:43 pm

பிரபல பாடகியும், டப்பிங் கலைஞருமான சின்மயி, நடிகரும் இயக்குனருமான ராகுல் ரவீந்திரனை 2014-ல் திருமணம் செய்து கொண்டார். ரவீந்திரன் வணக்கம் சென்னை படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருப்பார்.

chinmayi vairamuthu-updatenews360

சமூக வலைதளங்களில் அடிக்கடி சர்ச்சையான கருத்துகளால் ரசிகர்களின் கவனம் ஈர்ப்பவர் தான் பாடகி சின்மயி. தனது முதல் பாடலிலேயே சிறந்த பாடகி என்ற முத்திரையை பதித்தார் சின்மயி, அடுத்தடுத்து பல படங்களில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் தொடர்ச்சியாக பாடல்களை பாடினார். இசைத் துறையில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளார்.

chinmayi vairamuthu-updatenews360

இதனிடையே, பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதாக குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து வைரமுத்துவிற்கு எதிரான கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் சின்மயி. பலமுறை வைரமுத்து குறித்து மோசமான கருத்துக்களை சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு அவரை திட்டியுள்ளார்.

chinmayi vairamuthu-updatenews360

இந்நிலையில், தற்போது சின்மயி மற்றும் சமந்தாவின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில், சின்மயி அமர்ந்திருக்கையில், இருவரும் தங்களுக்குள் ஜாலியாக பேசிக் கொண்டிருக்கின்றனர். பின்னர், சின்மயி விளையாட்டாக கண்ணை கசக்கி கொண்டு, சமந்தா தன்னை டார்ச்சர் செய்வதாக கூறுகிறார். குறும்புகள் நிறைந்த வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

  • Tom Holland and Zendaya gets engaged SPIDER MAN ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிறது.. முடிவுக்கு வந்த 4 வருட டேட்டிங்!
  • Views: - 134

    0

    0