சமந்தா விவாகரத்துக்கு காரணம்..? மனதளவில் சித்திரவதை.. ஆண் நண்பர் வெளியிட்ட உண்மைகளால் ஆடிப்போன நாக சைதன்யா..!
Author: Vignesh19 December 2022, 8:00 pm
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. கவுதம் மேனனின் Ye Maaya Chesave என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, நீதானே எந்தன் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, தெறி, அஞ்சான், 24, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

தெலுங்கில், ஓ பேபி, ரங்கஸ்தலம், மகாநதி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் முன்னணி தெலுங்கு நடிகர்களுடனும் நடித்துள்ளார். மையோசிட்டிஸ் பிரச்சனைக்கு சிகிச்சை எடுத்து கொண்டே யசோதா டப்பிங் போன்ற பணிகளையும் ப்ரோமோஷன் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். இதுகுறித்து சமந்தா வெளியிட்ட புகைப்படம் வைரலானது.

தற்போது மயோசிடிஸ் என்கிற அரியவகை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நடிகை சமந்தாவுக்கு, இப்படத்தின் வெற்றி புத்துணர்ச்சியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில், ஒரு கையில் ஊசியுடன் சமந்தா ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தையும் வெளியிட்டார். இதனை பார்த்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர்.

இந்நிலையில், நடிகை சமந்தா உடல்நிலை மோசமடைந்ததால் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், சமந்தாவின் செய்தி தொடர்பாளர் இந்த தகவலை மறுத்ததோடு, சமந்தா தன்னுடைய ஹைதராபாத் வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாக தெரிவித்திருந்தார்.
மேலும், சமந்தாவின் உடல்நிலை நடக்க முடியாத அளவில் இருப்பதாக சொல்லப்பட்டது. அவரால் சிறிது தூரம் கூட நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. சமந்தாவிற்கு ஆயுர்வேத சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில், இதை தொடர்ந்து சமாந்த மேல் சிகிச்சைக்காக விரைவில் வெளிநாடு செல்ல உள்ளாராம்.
திருமணமாகி 4 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று கடந்த ஆண்டில் இருந்து தனிமையில் வாழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா.
இந்நிலையில், சமந்தாவின் நெருங்கிய Stylist நண்பரும் நடிகருமான ப்ரீதம் சமீபத்தில் ஒரு கருத்தினை தெரிவித்துள்ளார்.
அதில், ஆண்கள் பெரும்பாலும் உண்மைகளை மறைக்ககூடிய குணம் கொண்டவர்கள் என்றும், பெண்களுக்கு எதிராக வன்முறை, அடக்குமுறைகளை அதிகமாக கொண்டு உடலளவில் காயப்படுத்துவது சித்ரவதை செய்வது, விமர்சிப்பது போன்றவற்றை செய்வார்கள் எனவும், மேலும் இப்படி ப்ரீதம் பகிர்ந்த கருத்து நாக சைதன்யா மற்றும் அவரது குடும்பத்தினரை தான் மறைமுகமாக தாக்கி பேசியதாக கூறப்படுகிறது.
அத்தோடு குழந்தை பெற்றுக்கொடுக்க வேண்டும், கிளாமர் ஆட்டம் ஆடக்கூடாது என்று மாமனார் குடும்பம் கூறி கஷ்டப்படுத்தி இருப்பார்கள் என்றும் செய்திகள் வெளியானது.
முன்னதாக, சமந்தாவே நாகசைதன்யாவுடன் வாழும் போது முள் படுக்கையில் படுத்தால் எப்படியிருக்கும் அப்படியொரு வாழ்க்கை என்று மறைமுகமாக பேசியிருந்தார்.
இதுவே சமந்தா – நாக சைதன்யாவின் விவாகரத்துக்கு காரணம் எனவும் செய்திகள் தீயாய் பரவி இருந்தன.