சமந்தாவின் மூன்றாவது காதலர்? விரைவில் டும் டும் டும்! அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி கொடுக்குறாரே?
Author: Prasad22 April 2025, 1:36 pm
தென்னிந்தியாவின் டாப் நடிகை
நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது வளர்ச்சி மிகவும் பிரம்மிக்கத்தக்க வளர்ச்சியாகும். அதே போல் இவரது சொந்த வாழ்க்கையில் நடந்த காதல் கதைகளும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகும்.
சமந்தா டாப் நடிகையாக வளர்ந்து வந்த காலகட்டத்தில் நடிகர் சித்தார்த்தை காதலித்து வந்தார். ஆனால் சில ஆண்டுகளிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அதனை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

அதனை தொடர்ந்து சமந்தா தான் மையோசிட்டிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். பல வருடங்களாக இது குறித்து வெளியே தெரிவிக்காத சமந்தா 2022 ஆம் ஆண்டு இதனை வெளிப்படுத்தினார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கான சிகிச்சையையும் அவர் மேற்கொண்டு வருகிறார்.
மூன்றாவது காதலர்
இந்த நிலையில் சமந்தா ஒரு இயக்குனரை காதலித்து வருவதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. ஹிந்தியில் “தி ஃபேமிலி மேன்”, “ஃபர்ஸி”, “Guns and Gulaabs”, “சிட்டாடல்: Honey Bunny” ஆகிய வெப் சீரீஸ்களை இயக்கிவர்கள் Raj & DK. இந்த இருவரில் Raj Nidimoru-ஐ தான் சமந்தா காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
Raj & DK இயக்கிய “தி ஃபேமிலி மேன் 2”, “சிட்டாடல்: Honey Bunny” ஆகிய வெப் சீரீஸ்களில் சமந்தாதான் கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த வகையில் ராஜ் நிடிமொருவும் சமந்தாவும் இணைந்து பல விழாக்களில் கலந்துகொள்ளும் புகைப்படங்கள் பல வெளிவந்தன. இந்த நிலையில் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணமும் நடைபெறவுள்ளதாகவும் கூறுகின்றனர்.