தாய் ஆகிறாரா சமந்தா? நயன்தாரா வழியில் எடுத்த அதிரடி முடிவு!
Author: Udayachandran RadhaKrishnan12 November 2024, 1:08 pm
நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் திருமணம் செய்த 5 மாதங்களில் இருவரும் இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனது சர்ச்சையானது.

பின்னர் அதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டது, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தது தெரியவந்ததையடுத்து இந்த விவகாரம் அமைதியானது.
தாய் ஆகிறாரா சமந்தா?
இந்த நிலையில் வெகுநாள் கழித்து வெப் சீரியஸில் நடித்துள்ளார் நடிகை சமந்தா. Citadel Honey Bunny வெப் சீரியஸில் குழந்தைக்கு தாயாக நடித்திருந்தார் சமந்தா.

இது குறித்து நிஜ வாழ்க்கையுடன் தொடர்புப்படுத்தி பேசிய சமந்தா, எனக்கும் அம்மாவாக வேண்டும் என்ற கனவு உள்ளது.
இதையும் படியுங்க: ரஜினி, விஜய்யை முந்திய சூர்யா : அப்போ ரூ.1000 கோடி அசால்ட்டா?
இப்போது ஒன்றும் கால தாமதம் ஆகவில்லை, எனக்கு தாயாக மாற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அது அழகான அனுபவம்.
அதை நான் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறேன், ஆனால் மக்கள் பெரும்பாலும் வயதை பற்றி கவலைப்படுகிறார்கள். குழந்தை பெற்றெடுக்க வயது தடையில்லை. எப்போது வேண்டுமானாலும் தாய் ஆகலாம் என கூறியுள்ளார்.