தவறான முடிவுகள்…. நாக சைதன்யாவால் நாசமான வாழ்க்கை – சமந்தா வருத்தம்!
Author: Rajesh18 January 2024, 5:42 pm
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா தற்ப்போது பாலிவுட் படங்களில் கூட கவனம் செலுத்தி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா உலகில் உச்சத்தை தொட்டவர் நடிகை சமந்தா.

சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.

இந்நிலையில் சமந்தா தனது கடந்த கால வாழ்க்கை குறித்து எக்ஸ் கணவரை குறித்தும் மிகுந்த கோபத்துடன் மனதில் பட்டத்தை காட்டமாக பதிவிட்டிருக்கிறார் . அதாவது, “எனது வாழ்க்கையில் எடுத்த பல முடிவுகளில் என் பார்ட்னரின் பங்கீடு இருந்திருக்கிறது. அந்த சமயங்களில் எனக்கு என்ன பிடிக்கும்? பிடிக்காது? என்பதை கூட நான் மறந்துவிட்டு இருந்திருக்கிறேன்” என சமந்தா குறிப்பிட்டு இருக்கிறார். அது அத்தனையும் நான் வாழ்க்கையில் தெரிந்துக்கொள்ளவேண்டிய மிக முக்கிய படமாக இருந்தது என கூறியுள்ளார்.