மும்பையில் புதிதாக பங்களா வாங்கிய சமந்தா : எதுக்குன்னு தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க..!

Author: Rajesh
3 April 2022, 7:00 pm

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சமந்தா. நடிகர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்ததற்கு பிறகு, கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். தற்போது, நடிகர் விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இதுமட்டுமின்றி சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தில் இவர் ஆடியிருந்த நடனம் பட்தொட்டி எங்கும் எதிரொலித்து கொண்டு வருகிறது. அந்த அளவிற்கு கவர்ச்சி குத்தாட்டம் ஆடியிருந்தார். நிகழ்ச்சி ஒன்றில் படுகவர்ச்சியான உடையில் கலந்து கொண்டார். இது பெண்கள் உடை அணிவது தொடர்பான ஒரு விவாத்தையே உருவாக்கியது. அந்த அளவுக்கு அந்த உடையில் கவர்ச்சி வாரி வழங்கி இருந்தார்.

இந்த நிலையில், அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். நடிகை சமந்தா, பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்தாலும், சமூக வலைதளங்களிலும் செம்ம ஆக்டிவாக இயங்கி வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் அவரை 2 கோடிக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். அவர்களைக் கவரும் விதமாக அவ்வப்போது போட்டோக்களையும், வீடியோக்களையும் அதில் பதிவிட்டு வருகிறார் சமந்தா. பொருட்களை புரமோட் செய்யும் விதமாக அவர் போடும் பதிவுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்படுகிறது.

இந்நிலையில், நடிகை சமந்தாவும் இந்தியில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதற்காக மும்பையில் புது வீடு வாங்க நடிகை சமந்தா முடிவு செய்துள்ளாராம். இதற்காக கடற்கரை அருகே ஒரு பங்களாவை தேர்ந்தெடுத்துள்ளாராம். அதன் மதிப்பு ரூ.3 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது மும்பையில் வாடகை வீட்டில் தங்கி இருக்கும் சமந்தா, விரைவில் அந்த புது வீட்டிற்கு குடிபெயர உள்ளாராம்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!