”நாய் காதல்”… நாக சைதன்யாவின் மறுமணம் குறித்து தாக்கி பேசிய சமந்தா!

Author: Udayachandran RadhaKrishnan
9 December 2024, 11:39 am

சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவுடன் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

அவர்களது திருமணம் சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நாகேஸ்வர ராவ் சிலைக்கு முன்பாக நடைபெற்றது.

இதையும் படியுங்க: பிக் பாஸ் பிரபலத்திற்கு புற்றுநோய்…37 வயதில் போராட்ட வாழ்க்கை..!

இந்த நிகழ்வில் திரையுலக பிரபலங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்த திருமணத்தில் நாகார்ஜுனா குடும்பம் 200 கோடி ரூபாய்வரை செலவிட்டதாக கூறப்படுகிறது.

நாய் காதல் : சமந்தா பதிவு

நாக சைதன்யாவின் மறுமணத்தைப் பற்றிய சமந்தாவின் கருத்துகள் எதுவும் வெளிப்படையாக இருக்கவில்லை. இந்நிலையில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில், தனது நாய் சாஷாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த அவர், “எந்தக் காதலும் சாஷாவின் காதல் போல் வராது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Samantha and his dog Saasha

இதன் பின், நெட்டிசன்கள் இந்த பதிவில் மறைமுகமாக நாக சைதன்யாவை சமந்தா குறைக்கின்றாரா என்று கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…