திருமணம் ஆன பிரபலத்துடன் சமந்தா காதல்? நெருக்கமான புகைப்படங்கள் லீக்!

Author:
15 August 2024, 12:36 pm

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் நட்சத்திர நடிகையாகும் அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.

நடிகை சமந்தா ஹே மாயா சேஷாவே திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அப்படத்தின் இளம் ஹீரோவாக நடித்த நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வந்தார். கிட்டத்தட்ட 8 வருடங்களாக இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்த திருமணத்திற்கு பிறகு மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்த இந்த ஜோடி நான்கு வருடத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். ரசிகர்களின் பேவரைட் ஜோடியாக பார்க்கப்பட்ட இவர்களின் விவாகரத்து அவர்களின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது.

இன்று வரை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சமந்தா திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடிக்க ஆரம்பித்து பாலிவுட் சினிமாவிலும் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். இப்படியான சமயத்தில் நாக சைதன்யா பிரபல நடிகையான சோபிதா துலிபாலாவை ரகசியமாக சில வருடங்கள் டேட்டிங் செய்து காதலித்து வந்தார். பின்னர் நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்நிலையில் நடிகை சமந்தா தி பேமிலி மேன் 2, Citadel படத்தினை இயக்கிய இயக்குனர் ராஜ் நிதிமோருவுடன் காதலில் இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இயக்குனர் ராஜ் நிதிமோருக்கு ஏற்கனவே திருமணமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

  • Amala Paul Share his Truth 17 வயதுல அந்த மாதிரியான படத்தில்.. தலைகாட்ட முடியல.. என் அப்பாதான் : அமலா பால் பகிர்ந்த உண்மை!