சமந்தாவுக்கு படத்துல கூட இப்படி ஒரு காட்சி இல்ல… பாலிவுட் நடிகர் செஞ்ச வேலையை பாருங்க : வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
19 July 2022, 7:16 pm

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா, பாலிவுட், ஹாலிவுட் என தனது வளர்ச்சிக்கான பாதையை தேர்வு செய்து அடுத்த லெவலுக்கு சென்று கொண்டிருக்கிறார்.

காபி வித் கரண் நிகழ்ச்சியில் சமந்தா கலந்து கொண்ட ஹாட்டான புகைப்படங்கள் வெளியான நிலையில், தற்போது அதன் புரமோ வீடியோ கரண் ஜோஹர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்‌ஷய் குமாரும் நடிகை சமந்தாவும் கரண் ஜோஹரின் பிரபலமான காபி வித் கரண் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டனர். விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் அந்த நிகழ்ச்சி வெளியாக காத்திருக்கிறது.

அதன் புரமோவை தற்போது கரண் ஜோஹர் ஷேர் செய்துள்ளார். அதில், நடிகர் அக்‌ஷய் குமார் செட்டுக்குள் வரும் போதே, சமந்தாவை அலேக்காக தூக்கிக் கொண்டு வரும் வீடியோ ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சிகப்பு கலரில் முன்புறம் ஜன்னல் வைத்த டாப் மற்றும் பிங்க் கலர் பேன்ட் அணிந்து கொண்டு செம ஹாட்டாக சமந்தா பங்கேற்றுள்ளார். நடிகர் அக்‌ஷய் குமாருடன் பரம நெருக்கம் காட்டி நிகழ்ச்சி முழுவதும் சமந்தா செய்துள்ள சேட்டைகளை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

என்ன இருவரும் இந்த அளவுக்கு நெருக்கம் காட்டி வருகின்றனரே என கமெண்ட் பக்கத்தில் பலரும் கதறி உள்ளனர். பாலிவுட்டில் நடிகை சமந்தா அக்‌ஷய் குமாருடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்றும் அதற்கான புரமோஷன் நிகழ்ச்சியாகவே காபி வித் கரண் ஷோவில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டிருக்கின்றனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

தி ஃபேமிலி மேன் சீசன் 2 வெப்சீரிஸில் ராஜி கதாபாத்திரத்தில் செம போல்டாக நடித்து பாலிவுட் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த சமந்தா, அக்‌ஷய் குமார் படம் மூலம் பாலிவுட்டில் மிகப்பெரிய என்ட்ரி கொடுக்க காத்திருக்கிறார்.

சமந்தாவை ஒரு பொம்மை போல கண்டபடி தூக்கி சுற்றி அவருடன் நடனம் ஆடியுள்ள புரமோ வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது. ஷாருக்கான் படத்தில் நயன்தாரா அறிமுகமாகவுள்ள நிலையில், அதற்கு போட்டியாக அக்‌ஷய் குமார் படத்தில் சமந்தா அறிமுகமாக போகிறாராம். ஆயுஷ்மான் குரானா படத்திலும் சமந்தா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த ஷோவில் தான் அன்ஹேப்பி மேரேஜ்களுக்கு நீங்க தான் காரணம் கரண் ஜோஹர் என நடிகை சமந்தா குற்றாச்சாட்டு முன் வைத்ததாகவும் முன்னதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் வியாழக்கிழமை ஒளிபரப்பாகவுள்ள அக்‌ஷய் குமார், சமந்தா ஃபன் சாட் ஷோவின் புரமோ வீடியோ டிரெண்டாகி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 640

    0

    0