சமந்தா சொன்ன பகீர் பதில்; இப்போது டிரெண்ட் ஆகும் பேட்டி; ஜுவாலா கட்டா எழுப்பிய கேள்வி,..
Author: Sudha8 July 2024, 3:02 pm
சமீபத்தில் சமந்தா நெபுலைசர் கருவியை பயன்படுத்துவதை குறித்து தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
அதற்கு தி லிவர் டாக் என்ற பெயரில் இணையத்தில் பேசி வரும் மருத்துவர் இது போன்ற தவறான சிகிச்சையை பரிந்துரைக்கும் இந்தப் பெண்ணை சிறையில் அடைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலளித்த சமந்தா இந்த மருத்துவ முறையை எனக்கு சொன்னவரும் ஒரு மருத்துவர் தான். என்னுடைய மருத்துவரிடம் நேரடியாக பேசுங்கள் என தெரிவித்திருந்தார்.
தற்போது விஷ்ணு விஷாலின் மனைவி ஜுவாலா கட்டா சமந்தாவின் பெயரை குறிப்பிடாமல் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார் அதில் இதைப் போன்ற மருத்துவ முறைகளை மக்களுக்கு பரிந்துரைக்கும் பிரபலங்கள் அந்த மருத்துவ முறையால் யாரேனும் இறந்து போனால் அதற்கு பொறுப்பை ஏற்பார்களா? அல்லது அவர்களுக்கு அந்த மருத்துவ முறையை பரிந்துரைத்த மருத்துவர் பொறுப்பேற்பாரா? என பதிவிட்டு இருந்தார்.
இதற்கிடையில் சமந்தா 2017 ஆம் ஆண்டு அளித்த பேட்டி ஒன்று இப்போது இணையத்தில் பிரபலமாகி வருகிறது
அந்த பேட்டியில் உணவா? செக்ஸா?எனும் கேள்விக்கு சமந்தா ‘செக்ஸ்’என பதில் சொல்கிறார். இதைப்பார்த்து பலரும் தங்களுடைய கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இது 2017 ஆம் ஆண்டு எடுத்த பேட்டி அப்படியே அவர் தாம்பத்தியத்தை பற்றி பேசியிருந்தாலும் அது அவருடைய சொந்தக்கருத்து இதைப் பற்றி மற்றவர்கள் கருத்து சொல்ல வேண்டாம் என ஒரு தரப்பினரும் விவாதித்து வருகின்றனர்.