சமந்தாவுக்கு டும் டும் டும்.. விவாகரத்துக்கு காரணமானவரையே மறுமணம் செய்கிறார்!

Author: Udayachandran RadhaKrishnan
21 February 2025, 11:13 am

நடிகை சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து ஊரறிய திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

இது ரசிகர்களுக்குள் சோகத்தை ஏற்படுத்தியது. ஒரு பக்கம் வாழ்க்கையில் தோல்வியடைந்த சமந்தா அதில் இருந்து மீள முடியாமல் தவித்தார்.

இதையும் படியுங்க: அஜித் பட நடிகர் மீது முதல் மனைவி பரபரப்பு புகார்.. 3வது மனைவியுடனும் சிக்கலா?

ஆனால் மறுபக்கம் நாக சைதன்யாவோ நடிகை சோபிதாவை காதலித்து ஊர் ஊராக சுற்றினார். கடைசியில் அவரையே பெற்றோர் சம்மதத்தோடு இரண்டாம் திருமணமும் செய்து கொண்டார்.

விவாகரத்துக்கு காரணமானவரை மணம் முடிக்கும் சமந்தா?

ஆனால் சமந்தா மையோசிடிஸ் நோயால் அவதிப்பட்டார். மெல்ல மெல்ல அதில் இருந்து குணமாகி பின்னர் தனது கேரியரில் கவனம் செலுத்தி தற்போது படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

இந்த நிலையல் காதலர் தினத்தன்று, சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட போட்டோக்கள் பேசு பொருளானது. உடன் இருந்த நபர் யாரென்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பினர்.

இறுதியில் அவர் இயக்குநர் என கண்டுபிடித்தனர். அந்த இயக்குநர்தான் தி ஃபேமிலி மேன் படத்தை உருவாக்கியவர். இந்த படம் உருவாக்கப்பட்ட போது தான், கவர்ச்சியாக சமந்தா நடிக்கக்கூடாது என நாகர்ஜூனா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.

Samantha second Marriage

தற்போது அந்த படத்தின் இயக்குநரான ராஜ்நிதி மோரு என்பவரை சமந்தா மறுமணம் செய்ய உள்ளதாக தகவல் தீயாய் பரவியது. ஒரு பக்கம் இது வதந்தி என கூறப்பட்ட நிலையில் தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது.

samantha and Raj Nidimoru

ராஜ் நிதிமோருவின் சிட்டாடல் ஹனி பனியில் சமந்தா நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

  • Laika Productions exits Jason Sanjay film விஜய் அரசியலால் ஜேசன் சஞ்சய் படப்பிடிப்பில் சிக்கல்..லைக்கா எடுக்கப்போகும் அதிரடி முடிவு.!
  • Leave a Reply