சமந்தாவுக்கு கோவில் கட்டிய உயிர் ரசிகன் – காரணத்தை கேட்டதும் உடம்பு சிலிர்க்குது!

Author: Shree
27 April 2023, 4:16 pm

சமந்தாவுக்கு கோவில் கட்டி சிறப்பு பிரார்த்தனை செய்த தீவிர ரசிகன்!

சென்னையில் பிறந்த பல்லாவரத்து பெண்ணான நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். இவரின் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.

samantha_updatenews360

தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது அவரது நடிப்பில் சகுந்தலம் திரைப்படம் கடந்த14ம் தேதி வெளியானது. இப்படத்தை பெரிதும் நம்பியிருந்த சமந்தாவுக்கு பெரும் தோல்வி தான் கிடைத்தது. ரூ. 65 கோடி செலவில் உருவான இப்படம் வெறும் ரூ. 10 கோடி வசூல் ஈட்டி பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டது.

தமிழ் நாட்டை விட சமந்தாவிற்கு தெலுங்கில் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். சின்ஹா தோல்வியால் சமந்தாவுக்காக அவர்களும் கவலையில் உள்ளனர். இந்த நிலையில் சமந்தாவுக்கு ஆந்திராவை சேர்ந்த தீவிர ரசிகரான தெனாலி சந்தீப் என்பவர் ஆந்திர மாநிலம் பாபட்லாவில் உள்ள ஆலபாடு என்கிர கிராமத்தில் தனது வீட்டிலேயே இந்த கோவிலை கட்டி உள்ளார். இந்த கோவிலின் திறப்பு விழா நாளை அவரது பிறந்தநாள் எனபதால் திறக்கவுள்ளார்.

இது குறித்து கூறிய ரசிகர் தெனாலி சந்தீப் “நான் நடிகை சமந்தாவின் அழகைப் பார்த்தோ அல்லது அவரது நடிப்பைப் பார்த்தோ அவரது ரசிகர் ஆகவில்லை .சமந்தா தன்னுடைய பிரதியுஷா அறக்கட்டளை மூலம் செய்து வரும் பல்வேறு சமூக நலப்பணிகள் தன்னை மிகவும் கவர்ந்ததால், அவருடைய ரசிகர் ஆனேன். நான் சமந்தாவை இவர் இதுவரை நேரில் கூட பார்த்தது கிடையாது. ஆனால், சமந்தாவிற்கு நோய் பாதிப்பு ஏற்பட்ட போது அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று திருப்பதி கோவிலுக்கு எல்லாம் சென்று பிரார்த்தனை செய்திருக்கிறேன் என்றார். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • Squid Game Season 2 Review and Explain the Endingஸ்குவிட் கேம் சீசன் 2 : முதல் சீசன் ஒரு பார்வை மற்றும் இரண்டாவது சீசன் விமர்சனம்!!
  • Views: - 534

    4

    0