மீண்டும் சமந்தாவை துரத்தும் கொடிய நோய்…இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் ஷாக்..!
Author: Selvan11 January 2025, 1:05 pm
சிக்கன்குனியா நோயால் அவதிப்படும் சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா.இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் நிறைய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.
அதன் பின்பு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். 4 வருடங்களுக்கு பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான சமந்தா அடுத்து மயோடிஸ் என்னும் ஒரு வித தசை நோயால் பாதிப்படைந்தார்.அதிலிருந்து கொஞ்சோ கொஞ்சமாக மீண்டு தற்போது சில வெப் தொடர்களில் நடித்து சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
இதையும் படியுங்க: அரை நிர்வாணமாக பிறந்தநாள் கொண்டாட்டம்… நல்ல வாழ்றாருயா ஹிருதிக் ரோஷன்!
இவர் சினிமாவில் நடிப்பதை தாண்டி தற்போது படங்களை தயாரித்தும் வருகிறார்.எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா தனக்கு தானே ஆறுதல் சொல்லி,மோட்டிவேஷனல் ஆன பதிவுகளை பதிவிட்டு வருவார்.
அந்த வகையில் தற்போது சிக்கன்குனியா நோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.மேலும் அந்த நோயின் தாக்கத்தால் மூட்டு வலி பிரச்னையில் இருந்து மீள்வதற்கு உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறேன் என தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் விரைவில் குணமடைந்து சினிமாவில் பல படங்களில் நடிக்க வேண்டும் என ஆறுதல் கூறி வருகின்றனர்.