லிப்-லாக் அடிக்க அசால்டாக ஒப்புக்கொண்ட நடிகை.. நள்ளிரவில் சமந்தாவை கட்டித்தழுவிய நடிகர்..!
Author: Vignesh5 March 2024, 2:01 pm
தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன். இவர் சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும்.
இது பெரிய தொழிலாகவே அவர் செய்து வருகிறார். இதற்காக பல யூடியூப் சேனல்கள் அவருக்கு ஒரு நல்ல தொகை கொடுத்து நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் குறித்து பேச வைக்கிறார்கள். அதை ரசிக்க ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது. அப்படி அவர் பேசும் விஷயங்களுக்கு வரும் சர்ச்சைகளையும் தைரியமாகவே எதிர்கொண்டு வருகிறார்.
உதாரணத்திற்கு பீச் ரோட்டில் வாக்கிங் செல்லும்போது நடிகை ரேகா நாயரிடம் அடி வாங்கியது. மூத்த பத்திரிகையாளர் கே. ராஜன் பயில்வானனை மேடையில் அசிங்கப்படுத்தியது உள்ளிட்ட சம்பவங்கள் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் சமந்தா, அனுபமா பரமேஸ்வரனை வம்பிற்கு இழுத்து பேசியுள்ளார்.
இதுகுறித்து, பேசிய பழைய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு படத்தில் முத்தக்காட்சி இருக்கும் என்று அனுபமாவிடம் சொன்னதும் நெளிந்தாரம். 50 லட்சம் தரேன் என்று சொன்னதும் ஓகே சொன்ன, மத்ததுக்கு எல்லாம் நாட் ஓகே வா? என ரங்கநாதன் கேள்வி எழுப்பி உள்ளார். இதையெல்லாம், செய்தாவது நடிகைகள் மார்க்கெட்டை சரிப்படுத்தி விட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், அவர் பேசுகையில், தெலுங்கு படத்தில் சமந்தா விஜய் தேவரகொண்டா நடித்தார்கள். அப்போது, அந்த படத்தின் ஷூட்டிங் நள்ளிரவில் நடந்தது. இரவு 12 மணிக்கு கதவை தட்டி இருக்கிறார்கள். திறந்து பார்த்தால் சமந்தாவுக்கு ஹாப்பி பர்த்டே சொல்லி விஜய் தேவரகொண்டா சமந்தாவை கட்டித்தழுவி உள்ளார் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.