பழனி கோவிலில் கண்ணீர் மல்க தரிசனம் செய்த சமந்தா.. பிரபல இயக்குநருடன் படி வழியே பயணம்.. குவிந்த ரசிகர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 February 2023, 9:31 pm

பழனி முருகன் கோவிலில் உடல் நலம் முழுமையாக குணமடைய வேண்டி நடிகை சமந்தா, 600 மேற்பட்ட படிகளில் வழியாக சூடம் ஏற்றியபடியே மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு வருகை தந்த நடிகை சமந்தா, படிப்பாதை வழியாக 600 மேற்பட்ட படிகளில் சூடம் ஏற்றி கொண்டு பழனி மலை கோவில் மேலே வந்து ஆனந்த விநாயகரை வணங்கி விட்டு, பின்னர் ராஜ அலங்காரத்தில் முருகனை சாமி தரிசனம் செய்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய போது சமீப காலமாக உடல்நல குறைவால் பாதிக்கபட்டதாகவும், தற்போது கடவுளின் அருளோடும் மருத்துவர்களின் ஆலோசனைகளோடு மீண்டு வந்ததாகவும் மேலும் முழுமையாக உடல் நலம் பெற வேண்டி வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக பழனி கோவிலுக்கு வந்த சாமி தரிசனம் செய்த்தாகவும் தெரிவித்தார்.

கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கபட்டது. அவருடன் 96 திரைப்பட இயக்குநர் சி.பிரேம்குமார் மற்றும் உறவினர்கள் வந்திருந்தனர்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!