சண்டை போட ரெடி..சமந்தா போட்ட இன்ஸ்டா பதிவு..அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
Author: Selvan5 December 2024, 4:57 pm
சமந்தாவின் மனநிலை
நேற்று இரவு 8 மணிக்கு மிகப் பிரமாண்டமாக நாக சைதன்யா-சோபிதா திருமணம் பாரம்பரிய முறைப்படி நடைப்பெற்றது.
ஏற்கனவே நாக சைதன்யா சமந்தாவை காதலித்து திருமணம் செய்து,பின்பு இருவரும் விவாகரத்து வாங்கி பிரிந்தனர்.
இந்நிலையில் நாக சைதன்யா இரண்டாவதாக சோபிதாவை காதலித்து கரம் பிடித்துள்ளார்.இதனால் சமந்தா ரசிகர்கள் சமந்தாவின் தற்போதைய மன நிலை என்னவா இருக்கும் என ஆராய்ந்து பார்க்கும் போது,சமந்தா நேற்று அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த ஸ்டோரியில் ஒரு சிறுவனும் சிறுமியும் சண்டையிட்டுக்கொள்கிறார்கள். அதில் அந்த சிறுமி அந்த சிறுவனிடமிருந்து ஈஸியாக தப்பித்து சண்டையிடுகிறார். அந்த வீடியோவுக்கு சமந்தா, “இந்த சிறுமி போல் சண்டையிட வேண்டும்”என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்க: ஹரிஷ் கல்யாணுடன் இணையும் பாலிவுட் நடிகர்..ஆஹா மஜா கூட்டணியா இருக்கே ..!
இதனைப் பார்த்த ரசிகர்கள் முன்னாள் கணவருக்கு திருமணம் நடக்கும் நேரத்தில் இப்படி ஒரு வீடியோவை போஸ்ட் செய்திருப்பது,ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது