சூப்பர் ஸ்டார் முன்பு நடிகர் விஜயை அவமானப்படுத்திய சமந்தா.. வைரலாகும் வீடியோ..!
Author: Vignesh16 March 2024, 2:25 pm
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா தற்போது பாலிவுட் படங்களில் கூட கவனம் செலுத்தி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா உலகில் உச்சத்தை தொட்டவர் நடிகை சமந்தா.
தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து இருவரும் நடித்து வருகிறார்கள்.
இதனிடையே, சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். நோய்த்தொற்றின் தாக்கத்தினால் உடல் ரீதியாக அவர் நாளுக்கு நாள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாக அவ்வப்போது அவரே கூறியுள்ளார். தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த சமந்தா திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமந்தா தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில் தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு கலந்து கொண்டார். அப்போது, மகேஷ்பாபுவிடம் உங்களுக்கு எந்தவிதமான படங்களில் நடிக்க பிடிக்கும் என்று சமந்தா கேள்வி எழுப்பினார். அதற்கு கத்தி போன்ற திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.
அதன் பின்னர், நீங்கள் அதை ரீமேக் செய்து நடிப்பீர்களா என அதன்பின் கேள்வி எழுப்பினார் சமந்தா. அதற்கு இல்லை நான் ரீமேக் படங்களில் நடிக்க மாட்டேன் என கூறினார் மகேஷ் பாபு. நீங்கள் விஜய் உடைய படங்களை ரீமேக் செய்து நடிக்க மாட்டீர்கள். ஆனால், உங்கள் படங்களை விஜய் ரீமேக் செய்து நடிக்கிறார் என கூறியுள்ளார்.
ரசிகர்கள் இந்த வீடியோவை இணையதளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். விஜய்யை அவமானப்படுத்தும் வகையில் சமந்தா பேசியுள்ளார் என விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள். மற்றவர்கள் இது உண்மை தானே என்றும் கூறி வருகிறார்கள்.
. @Samanthaprabhu2 ???
— Ajith Telugu FC (@Ajith_TFC) March 15, 2024
Sam – What is the latest film u liked
MB- Kathi
Sam- Will u remake it?
MB- No, I dont do remakes
Sam- But all your films will be remaked by @actorvijay in tamil ?#Ajithkumar #GoodBadUgly #Vidaamuyarchi pic.twitter.com/QsSqzsUDeT