நிலைமை ரொம்ப மோசமாகிடுச்சு… முகத்தை கூட வெளியில் காட்ட முடியாமல் தவிக்கும் சமந்தா!
Author: Shree21 September 2023, 6:58 pm
மெட்ராஸ் பெண்ணாக, அழகிய இளம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமந்தா. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கும் இவர் சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.
தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து இருவரும் நடித்து வருகிறார்கள். இதனிடையே சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். நோய்த்தொற்றின் தாக்கத்தினால் உடல் ரீதியாக அவர் நாளுக்கு நாள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.
தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தாலும் அந்த நோய் முற்றிலுமாக குணமாகவில்லையாம். இந்நிலையில் தற்ப்போது ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது அதாவது சமந்தா சமீபத்திய பேட்டி ஒன்றில் என் உடல் நாளுக்கு நாள் மோசமடைந்தது வருகிறது. என் சருமத்தில் புதுசு புதுசா பிரச்னைகள் வருகிறது. அவ்வளவு ஏன் என் முகத்தை கூட வெளியில் காட்டமுடியாத அளவிற்கு மோசமான நிலைக்கு நான் தள்ளப்பட்டிருக்கிறேன். இப்போது கூட என் முகத்தில் ஃபில்ட்டர் உபயோகித்து தான் உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். என்னால் அதிக வெளிச்சத்தில் நிற்க கூட முடியாது என கூறியுள்ளார்.