“எனக்கு ரிஸ்க் எடுக்கிறது எல்லாம் ரஸ்க் சாப்பிடற மாதிரி”… அந்த வெப் சீரிஸுக்காக சமந்தா செய்த செயல்..!
Author: Vignesh20 February 2023, 6:30 pm
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான தெலுங்கில் Ye Maaya Chesave மற்றும் தமிழில் விண்ணைதாண்டி வருவாயா திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சமந்தா.
இதற்கு முன்னர், கல்லூரி படிப்பை முடித்தவுடன் மாடலிங் மற்றும் சில முக்கிய விளம்பரங்களிலும் நடித்து வந்தார். 2010ம் ஆண்டு, அதர்வா ஜோடியாக பானா காத்தாடி திரைப்படத்தில் நடித்த இவர், இதன் பின்னர், நிறைய தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதன் மூலம், அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்று, தென்னிந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றார். கடைசியாக தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து இருந்தார்.
முன்னதாக நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, விவகாரத்து செய்யப் போவதாகவும் அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அவர், மையோசிட்டிஸ் என்ற நோயால் அவதிப்பட்டு தற்போது அதற்கு சிகிச்சை மேற்கொண்டு உடல்நிலை தேறி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சமந்தா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த போது அவருடைய தாய் தான் சமந்தாவை பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டாராம். சென்னையில் இருந்த சமந்தாவின் தாய், உடனடியாக ஹைதராபாத் சென்று சமந்தாவை பார்த்துக்கொண்டு, தற்போது வரை சமந்தாவுடன் தான் இருக்கிறாராம்.
இந்நிலையில், உத்திரகாண்டில் இருக்கும் நடிகை சமந்தா அங்கு பாக்சிங் பயிற்சி எடுக்கும் பொழுது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
பாலிவுட்டில் சிடேட்டல் வெப் சீரிஸுக்காக தான் சமந்தா இந்த பாக்சிங் பயிற்சி எடுத்து வருகிறாராம்.
இந்த வெப் சீரிஸில் சமந்தாவுடன் இணைந்து பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்க இருப்பதாகவும், மேலும் தி பேமிலி மேன் 2 வெப் சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே தான் இந்த சிடேட்டல் சீரிஸையும் இயக்க உள்ளராம்.