கால் Balance இல்லமா, செம Strong.. வேற லெவல் செய்த சமந்தா.. Latest Video..!

Author: Rajesh
30 April 2022, 10:43 am

தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தவர். தமிழ் மொழியில் தெறி, மெர்சல், 24 போன்ற திரைப்படங்களில் விஜய், சூர்யா போன்ற டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார்.

தெலுங்கிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரம் சமந்தா, நாக சைதன்யா காதல் திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் பிரிந்துவிட்டனர். அதனைத் தொடர்ந்து, படங்களில் கவனம் செலுத்தி வந்த சமந்தா, புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலில் ஆட்டம் போட்டது பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆனது.

தற்போது, இவர் நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் கதீஜா கதாபாத்திரம் செம வைரல் ஆகி வரவேற்பு பெற்று வருகிறது.

தொடர்ந்து படங்களில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் உடற்பயிற்சி செய்வதை மட்டும் எப்போதும் அவர் நிறுத்தியதே இல்லை. இப்போது அவரது ஒர்க் அவுட் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர், கால்களின் சப்போர்ட் இல்லாமல் கையாலேயே ஏணி ஏறுகிறார். இந்த வீடியோ இப்போது வெளியாக சமந்தாவின் விடா முயற்சி கண்டு ரசிகர்கள் மிரண்டு போய்யுள்ளனர்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 1422

    1

    0