எலும்பும் தோலுமாக சமந்தா… தூங்காம, சாப்பிடாம இப்படி ஆகிட்டாங்களே? ரசிகர்கள் ஷாக்!

Author:
21 August 2024, 9:28 pm

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் நட்சத்திர நடிகையாகும் அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.

samantha

நடிகை சமந்தா ஹே மாயா சேஷாவே திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அப்படத்தின் இளம் ஹீரோவாக நடித்த நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வந்தார். கிட்டத்தட்ட 8 வருடங்களாக இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்த திருமணத்திற்கு பிறகு மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்த இந்த ஜோடி நான்கு வருடத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். ரசிகர்களின் பேவரைட் ஜோடியாக பார்க்கப்பட்ட இவர்களின் விவாகரத்து அவர்களின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது.

இன்று வரை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சமந்தா திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடிக்க ஆரம்பித்து பாலிவுட் சினிமாவிலும் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். அண்மையில் நாக சைதன்யா பிரபல நடிகையான சோபிதா துலிபாலாவை நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார்.

சமந்தா தொடர்ந்து திரைப்படங்களில் அதிக கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார். இந்நிலையில். சமந்தாவின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி சமந்தாவா இது? என இவ்வளவு ஒல்லி ஆகிட்டார்? என்ன ஆச்சு இவங்களுக்கு? இன்னும் இவங்க நோயில் இருந்து முழுமையாக குணமடையவில்லையா என ரசிகர்கள் அதிர்ச்சியாகி கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

சமந்தா மிகவும் ஒல்லியாகி தோற்றமே மெலிந்து போய் எலும்பும் தோலுமாக காணப்படுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக ஒருவேளை சமந்தா முன்னால் கணவரின் திருமணம் நிச்சயதார்த்தம் போன்ற விஷயங்களால் மிகுந்த மனவேதனைக்குள்ளாகி தூங்காமல்…. சாப்பிடாமல் எப்படியாகி ஆகிவிட்டாரோ? என ரசிகர்கள்.சந்தேகித்து கேள்வி எழுப்பி உள்ளனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 206

    0

    0