சன்னி லியோன் ரேஞ்சுக்கு இறங்கிய சமந்தா.. என்ன டிரெஸ் போட்டாலும்.. டல்லடிக்கும் மேகசீன் கிளிக்ஸ்..!

Author: Vignesh
8 March 2024, 4:18 pm

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா தற்போது பாலிவுட் படங்களில் கூட கவனம் செலுத்தி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா உலகில் உச்சத்தை தொட்டவர் நடிகை சமந்தா.

சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.

naga-chaitanya-samantha

தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து இருவரும் நடித்து வருகிறார்கள்.

இதனிடையே, சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். நோய்த்தொற்றின் தாக்கத்தினால் உடல் ரீதியாக அவர் நாளுக்கு நாள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாக அவ்வப்போது அவரே கூறியுள்ளார். தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த சமந்தா திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், மலேசியாவுக்கு ட்ரிப் சென்றுள்ள சமந்தா அங்கு குளத்தில் டூ பீஸ் உடையில், அரைநிர்வாண குளியல் போட்ட புகைப்படங்களை தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு இணையத்தையே அதிர வைத்தார். தற்போது, சினிமாவில் 14 வருடம் நிறைவு செய்திருக்கும் சமந்தாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

samantha - updatenews360

அதாவது, நடிகை சமந்தாவுக்கு மொத்தம் மூன்று வீடுகள் உள்ளது. ஹைதராபாத்தில் இருக்கும் சமந்தாவின் பிரம்மாண்ட வீட்டின் மதிப்பு மட்டும் 100 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. கதாநாயகியாக நடிக்க 7 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாகவும், ஹிந்தியில் உருவாகி வரும் வெப் தொடரில் நடிப்பதற்காக ரூபாய் 10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

மேலும், விளம்பர படங்கள் மூலம் நடிகை சமந்தா 1.5 கோடி முதல் 2 கோடி வரை சம்பாதித்து வருகிறாராம். அதேபோல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா வெளியிடும் பதிவுகளுக்கு 20 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது என்கிறார்கள். தற்போது வரை, எந்தவொரு புதிய படத்திலும் நடிகை சமந்தா ஒப்பந்தமாகவில்லை.

samantha - updatenews360

இவர் தொடர்ந்து, கிளாமர் போட்டோக்களை மட்டுமே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். மேலும், கிடைக்கும் விளம்பரங்களில் முடிந்த வரை பெரிய சம்பளமாக பேசி நடித்து வருகிறார். ஆனால், என்ன தான் சன்னி லியோன் ரேஞ்சுக்கு இறங்கி கவர்ச்சியாக டிரெஸ் போட்டாலும், சமந்தாவின் முகத்தில் பழைய பொலிவு இல்லை என்றே பலரும் கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர்.

samantha - updatenews360
samantha - updatenews360

samantha - updatenews360
  • Case Against MGR எம்ஜிஆர் மீது வழக்கு தொடுத்து ஜெயித்தவர் என் அப்பா… பிரபல நடிகர் ஓபன் டாக்!
  • Views: - 234

    0

    0