வீணாப் போன வேலையை செஞ்சிட்டேன் : நாக சைதன்யா பற்றி சமந்தா பதில்!

Author: Udayachandran RadhaKrishnan
25 November 2024, 1:51 pm

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் தனக்கென்று ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள நடிகை சமந்தா, சமீபத்தில் வெளியாகிய சிட்டாடல் என்ற வெப் தொடரின் மூலம் மேலும் புகழைப் பெற்றுள்ளார். இவர் நடிப்பில் இதற்கு முன்பு வெளிவந்த தி பேமிலி மேன் 2 வெப் சீரிஸ் மிகுந்த பாராட்டைப் பெற்றதோடு, சிட்டாடல் தொடரிலும் தன் திறமையைக் காட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

ஆக்ஷன் காட்சிகளில் தனது துணிச்சலான நடிப்பால் பாராட்டுகளைப் பெற்ற சமந்தா, தற்போது அடுத்தடுத்த பிரமாண்டமான படங்களில் நடிக்கவிருப்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

சிட்டாடல் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பரபரப்பு கருத்து:

சமீபத்தில் நடைபெற்ற சிட்டாடல் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், “நீங்கள் மிக அதிகமாக செலவழித்த, ஆனால் அதுவே வீணானதாக உணரப்பட்ட ஒரு விஷயம் என்ன?” எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, சமந்தா எந்தவித தயக்கமும் இன்றி, “என் முன்னாள் கணவருக்குக் கொடுத்த பரிசுகள் தான்” என்று கூறியுள்ளார்.

இதையும் படியுங்க: சிவகார்த்திகேயனுடன் குத்தாட்டம்.. VIBE MODEல் தனுஷ்… : மாஸ் வீடியோ!

அதுமட்டுமல்லாமல், “அதற்கு எவ்வளவு செலவழித்தீர்கள்?” என கேட்கப்பட்டதற்கு, சிரித்துக்கொண்டு “கொஞ்சம் அதிகமாகவே!” என்று பதிலளித்தார்.

சமந்தாவின் இந்த பதில், நிகழ்ச்சியில் கலகலப்பை ஏற்படுத்தியதோடு, தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Dragon Movie Box Office Collection கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!