“என் கடனை கட்ட முடியாதுன்னு அப்பா சொல்லிட்டாரு”… வறுமையில் பட்ட வேதனையை பகிர்ந்த சமந்தா!

Author:
7 August 2024, 1:56 pm

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து மிகக்குறிக காலத்திலே நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார். இதனிடையே தெலுங்கு சினிமாவில் பிரபல இளம் நடிகரான நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

samantha

கிட்டத்தட்ட 8 வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி 4 வருடத்திலேயே இந்த திருமண வாழ்க்கையில் முடித்துக் கொண்டனர் . 2021 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். அதை அடுத்து சமந்தா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே பாலிவுட் படங்களிலும் வெப் தொடர்களிலும் நடித்து அதிக கவனத்தை செலுத்தி வருகிறார் .

samantha

இந்த நிலையில் சமீபத்தில் காபி வித் கரண் சீசன் 7 நிகழ்ச்சி கலந்து கொண்டார் சமந்தா. அதில் தன் வாழ்வில் நடந்த பல சுவாரசியமான விஷயங்களையும் இதுவரை வெளியில் சொல்லாத பல தகவல்களை குறித்து மனம் திறந்து பேசி இருந்தார். அப்போது திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் சமந்தாவின் கனவா என கேள்வி எழுப்பியதற்கு, “எனது கடனை திருப்பி செலுத்த மாட்டேன் என்று எனது தந்தை கூறியதால் தான் நான் சினிமாவில் நடிக்கவே வந்தேன்.

samantha - updatenews360

எனது மேற்படிப்புக்கு பணம் செலுத்த என்னுடைய குடும்பத்திடம் பணமே இல்லை எனவே நான் வேறு வழியில்லாமல் சினிமாவில் நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன். “உன்னுடைய கடனை என்னால் செலுத்த முடியாது என்று என் தந்தை கூறிய அந்த தருணம் தான் என் வாழ்க்கையை மாற்றியது” என சமந்தா தெரிவித்தார். இவரது இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 186

    0

    0