உன் படத்துல நான் நடிக்கல? நீ என்ன அவ்ளோவ் பெரிய ஆளா? கீர்த்தி சுரேஷை வம்புக்கு இழுத்த சமந்தா!
Author: Shree29 March 2023, 8:35 pm
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையான சமந்தா மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
அதையடுத்து தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இருவருக்கு ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். இதற்கு காரணமே ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் சர்ச்சையான படுக்கையறை காட்சிகளில் நடித்தது தான் என கூறப்பட்டது.
இதனிடையே அவர் திடீரென மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். உடல் நலம் தேறியதும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது வெளியாகவுள்ள சாகுலத்தலம் படத்திற்காக ப்ரோமோஷனாக பேட்டிகள் கொடுத்து வருகிறார்.
அப்படி சமீபத்திய பேட்டி ஒன்றில், சாகுந்தலம் ட்ரைலரில் அதிதி பாலன் நடித்திருப்பதை பார்த்து சமந்தா படத்தில் அதிதி பாலனா? என எல்லோரும் ஷாக் ஆகிவிட்டோம் என ரம்யா கூற, “ஏன் அப்போ நான் கீர்த்தி சுரேஷ் படத்துல நடிக்கலயா? அதுல முழுக்க முழுக்க கீர்த்தி சுரேஷுக்கு தான் ஸ்கோப் இருந்தது. ஆனாலும் நான் என்னுடைய ரோலுக்காக மட்டும் நடித்தேனே. அப்படித்தான் இதுவும் என்று கூறி கீர்த்தி சுரேஷை வம்புக்கு இழுத்துள்ளார். மேலும் இப்படத்தில் அதிதி பாலனின் நடிப்பு பெரிதும் பேசும்படியாக இருக்கும் என்று சமந்தா கூறினார்.