முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் எடுத்த புகைப்படத்தை திடீரென பகிர்ந்த சமந்தா.. வைரலாகும் பதிவு..!

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான தெலுங்கில் Ye Maaya Chesave மற்றும் தமிழில் விண்ணைதாண்டி வருவாயா திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சமந்தா. இதற்கு முன்னர், கல்லூரி படிப்பை முடித்தவுடன் மாடலிங் மற்றும் சில முக்கிய விளம்பரங்களிலும் நடித்து வந்தார்.

2010ம் ஆண்டு, அதர்வா ஜோடியாக பானா காத்தாடி திரைப்படத்தில் நடித்த இவர், இதன் பின்னர், நிறைய தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இதன் மூலம், அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்று, தென்னிந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றார்.

கடைசியாக தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து இருந்தார். மையோசிட்டிஸ் என்ற நோயால் அவதிப்பட்டு வரும் சமந்தா, தற்போது அதற்கு சிகிச்சை மேற்கொண்டு உடல்நிலை தேறி வருவதாக கூறப்படுகிறது. தெலுங்கில் ‘ஷகுந்தலம்’, ‘குஷி’ படங்களில் தற்போது நடித்து வருகிறார். சாகுந்தலம் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.

தற்போது இந்த படத்திற்கான ப்ரொமோஷன் பணிகளில் சமந்தா ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், தன்னுடைய முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் எடுத்த புகைப்படத்தை சமந்தா சோசியல் மீடியாவில் பதிவிட்டது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. சமந்தா- நாக சைதன்யா இருவரும் சேர்ந்து நடித்த திரைப்படம் மஜ்லி. கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் வெளியாகி 4 ஆண்டுகள் ஆனதையொட்டி, இதை கொண்டாடும் விதமாக சமந்தா அவர்கள் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ள புகைப்படத்தில் நாக சைத்தன்யாவும் இருக்கிறார். இந்த புகைப்படத்தை மஜிலி படத்தின் இயக்குனர் சிவாவும் பகிர்ந்து இருக்கிறார். இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் பலரும் தங்கள் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

மார்க்கெட்டே இல்லை…சுந்தர் சி-யிடம் சரணடைந்த வாரிசு நடிகர்.!

சுந்தர் சி கதையை உடனே ஓகே செய்த நடிகர் கார்த்தி சுந்தர் சி தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனராக…

4 hours ago

ராஜமௌலி தொடர் டார்ச்சர்…திருமணமே ஆகல…பிரபலம் தற்கொலை முடிவு.!

நண்பர் ஸ்ரீனிவாசா ராவின் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு! பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது அவரது நீண்டகால நண்பர் எனக்கூறும் திரைப்படத்…

5 hours ago

கருவைக் கலைத்துவிடு.. காசு தாரோம்.. ஜிம் ஓனரின் தாய் டீல்.. பெண் விபரீத முடிவு!

தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…

6 hours ago

‘கூலி’ அடிபோலி…1000 கோடி உறுதி…சவால் விட்ட இளம் நடிகர்.!

அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…

6 hours ago

பங்கேற்க முடியாது.. போலீசார் மீதே நடவடிக்கை? – அண்ணாமலை முக்கிய முடிவு!

அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…

7 hours ago

குழந்தைகளை பார்க்கவே பயமாக உள்ளது…நடிகர் மாதவன் வேதனை.!

நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…

7 hours ago

This website uses cookies.