மெட்ராஸ் பெண்ணாக, அழகிய இளம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமந்தா. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கும் இவர் சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.
தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து இருவரும் நடித்து வருகிறார்கள். இதனிடையே சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். நோய்த்தொற்றின் தாக்கத்தினால் அவர் படங்களில் நடித்து வந்ததால் முழு ஒத்துழைப்பு கொடுக்க முடியாமல் தொடர் தோல்விகளை சந்தித்து மார்க்கெட் இழந்தார்.
இதனால் உடல் நிலையில் முழு அக்கறை செலுத்தி சிகிச்சை பெற்று பரிபூரணமாக குணமடைந்த பின்னர் மீண்டும் சினிமாவிற்கு வருகிறேன் என கூறி ஒரு வருடம் இடைவெளி விடுவதாக கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். எனவே கையில் இருக்கும் ப்ராஜெக்ட்களை முடித்த பிறகு சமந்தா சினிமாவில் இருந்து ஒரு வருடம் பிரேக் எடுக்க இருக்கிறார். மேலும், ஏற்கனவே வாங்கிய அட்வான்ஸ் பணத்தையும் சில தயாரிப்பாளர்களுக்கு திருப்பி கொடுத்துவிட்டார். சமந்தாவின் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு மிகுந்த வேதனையை கொடுத்தது.
தொடர்ந்து அவர் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்திக்கொண்டே குஷி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் நடித்த போது விஜய் தேவர்கொண்டாவுடன் ஏற்பட்ட நெருங்கிய நட்பு காதலாக மாறி இருவரும் ரகசிய உறவில் இருந்து வருவது அம்பலமாகியுள்ளது. இதனை இருவரும் அவ்வப்போது நெருக்கமாக இருந்து காதலை மறைமுகமாக வெளிப்படுத்தி வருகிறார்கள். சமந்தா விஜய் தேவர்கொண்டாவை விரைவில் மறுமணம் செய்துக்கொள்ளப்போவதாக கூட உறுதிப்படுத்தாத செய்திகள் வெளியானது.
அண்மையில் கூட குஷி படத்தின் ப்ரோமோஷனில் இருவரும் படு நெருக்கமாக நடனமாடிய ரொமான்டிக் வீடியோ கடந்த இரண்டு நாட்களாக சமூகவலைத்தளங்களில் வெளியாகி எல்லோரையும் முகம் சுளிக்க வைத்தது. அப்போது விஜய் தேவர்கொண்டாவுடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான போட்டோக்களை” இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். இதனிடையே அந்த மேடையில் சமந்தா தன்னுடைய முன்னாள் கணவருடன் நடித்து வெளியான மஜ்லி திரைப்படத்தின் பாடல்களையெல்லாம் பாடியிருந்தார். அதை கேட்டதும் சமந்தாவுக்கு அழுகை வந்துவிட்டது. ஆனால் கண்ட்ரோல் செய்துக்கொண்டு அமர்ந்திருந்தார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்திய சினிமாவின் புதிய சாதனை நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் எம்புரான் படம் இந்திய சினிமாவின் பல சாதனைகளை முறியடித்து…
பிரபலங்களின் ஹேர் ஸ்டைலிஸ்ட் சாதாரண ஹேர் கட்டிங்கிற்கு 20 ரூபாய் வசூலித்தவர்,இன்று ஒரு ஹேர் கட்டிங்கிற்கு 1 லட்சம் ரூபாய்…
ஐபிஎல் 2025 – புதிய சீசன்,புதிய விதிகள் இந்திய பிரீமியர் லீக் 2025-ம் ஆண்டின் 18-வது சீசன் நாளை (மார்ச்…
இன்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மாநிலங்களைவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தி திணிப்பு என கூறி மும்மொழிக் கொள்கையை…
உம்மிடி கிரிட்டிஸுக்கு எதிராக சிபிஐ வழக்கு தமிழ்த் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் சில ஆண்டுகளாக…
This website uses cookies.