ரஞ்சிதாவை போல பிரபல சாமியார் பிடியில் சிக்கிய நடிகை சமந்தா… 2-வது திருமணம் செய்ய திட்டமாம்..!
Author: Vignesh17 March 2023, 3:45 pm
மாநாடு படத்தில் எஸ். ஜே சூர்யா சொல்வது போல், சமந்தா வந்தார், நடித்தார், முதலிடத்தை பிடித்தார், முதலிடத்தில் இருக்கிறார், Repeatu. இந்த வளர்ச்சி எப்போது நடந்தது திட்டவட்டமாகத் தெரியவில்லை. எந்தப் படத்தின் மூலம் இவருக்கான அங்கீகாரம் இவ்வளவு தூரம் கிடைத்தது என்றும் தெரியவில்லை.
ஆனால் காத்துவாக்குல இரண்டு காதல் படம் ரிலீஸான பிறகு சென்னை முழுக்க கதீஜா பற்றிய பேச்சுதான். 2010- ல் மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், தற்போது சம்மு குட்டி விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் இவரின் நடிப்புக்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள்.பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன், இருவரும் தன்னுடைய விவாகரத்தை அறிவித்தனர்.
விவாகரத்துக்கு பின் பல மாதங்களாக சமந்தா மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் கடுமையான வலியும் கஷ்டத்தையும் சந்தித்து வந்தார்.
சிகிச்சைக்கு பின் தற்போது மீண்டு வரும் சமந்தா இந்தி வெப் தொடரில் நடித்து வருகிறார். இதனிடையே, நடிகை சமந்தா இரண்டாம் திருமணம் செய்யப்போகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது சத்குரு ஜக்கி வாசுதேவின் சிசியை-ஆக இருக்கும் சமந்தா அவரின் பேச்சை கேட்டு நடந்து வருகிறார்.
அப்படி சத்குரு கொடுத்த அட்வைஸ்-ஆல் தனது இரண்டாம் திருமணம் குறித்து சமந்தா யோசித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்ய தயாராகவும் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இத்தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
இதனிடையே, திருமண வாழ்க்கையை பற்றி முகம் சுளித்து பல பேட்டிகளில் பேசி வரும் சமந்தா அப்படியேதும் செய்யமாட்டார் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.