சமந்தா செய்த காரியம்; சுதா கொங்கரா மனதில் ஏற்பட்ட சோகம்! அடப்பாவமே
Author: Prasad28 April 2025, 11:05 am
டாப் நடிகை
தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலமாக வலம் வருகிறார் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி பங்காரம்” என்ற திரைப்படத்தில் நடித்து வரும் சமந்தா “சுபம்” என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார்.

இவரை பலரும் ஒரு சாதனை பெண்ணாகவே பார்க்கின்றனர். இவர் பல வருடங்களாகவே மையோசிடிஸ் என்ற அரிய நோய்க்காக சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார். ஆதலால் திரைப்படங்களில் நடிப்பதை முன்பை விட சற்று குறைத்துக்கொண்டார். எனினும் தன்னை பாதித்திருக்கும் நோயை எதிர்கொண்டு போராடி டாப் நடிகை என்ற புகழையும் தக்க வைத்துக்கொண்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட சமந்தாவை பற்றி சுதா கொங்கரா கூறிய செய்தி ஒன்று இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.
என் படத்துல நடிக்கமாட்டேன்னு சொல்லிட்டாங்க…
சமந்தாவை பற்றி பேச மேடையேறிய சுதா கொங்கரா, “நான் சமந்தாவை இரண்டு திரைப்படங்களுக்காக நடிக்க அழைத்தேன். ஆனால் அவர் நடிக்கவில்லை” என்று கூறினார்.
இதனை கேட்டதும் அருகில் நின்றுகொண்டிருந்த சமந்தா, “என்ன சொல்றீங்க? என்ன படத்துல?” என அதிர்ச்சியாக கேட்டார்.

அதற்கு சுதா கொங்கரா “எனது ஹிந்தி திரைப்படமான சர்ஃபிராவில் நடிக்க அவரை அணுகினேன். நவரசா திரைப்படத்திற்கும் நான் அவரை அணுகினேன். ஆனால் அவருக்கு அப்போது Date இல்லை. நான் சமந்தாவின் மிகப்பெரிய ரசிகை. வருங்காலத்தில் எனது திரைப்படங்களில் நடிப்பார் என நம்புகிறேன்” என்று கூறினார்.
சுதா கொங்கரா தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “பராசக்தி” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படம் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படமாகும்.
