கண்டிஷன் போடுற வேலை எல்லாம் வேற எங்காவது வச்சுக்கோங்க.. நயனுக்கு அதிர்ச்சி கொடுத்த இயக்குனர்..!

Author: Vignesh
13 June 2024, 6:44 pm

சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்துவரும் நயன்தாரா கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேல் தன் வளர்ச்சியில் தனக்கான ஒரு இடத்தை பெற்று கோட்டையை கட்டி வருகிறார். முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் பாலிவுட்டில் ஜவான் படத்தில் நடித்ததன் மூலம் தன் மார்க்கெட்டை அதிகரித்து 12 கோடி சம்பளமாக உயர்த்தி அதிர வைத்தார். தற்போது, தன்னுடைய இரண்டாம் திருமண நாளை கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் இரட்டை ஆண் குழந்தைகளுடன் கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படங்களும் இணையதளத்தில் ராக்கெட் வேகத்தில் வைரலானது.

nayanthara - updatenews360.jpg 2

இந்நிலையில், நடிகர் கவின் நடிக்கும் ஒரு படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாகவும், மலையாளத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகும் செய்திகள் கோலிவுட்டில் முணுமுணுக்கப்பட்டு வருகிறது. ஆனால், நடிகை நயன்தாரா திடீரென மலையாள படத்தில் இருந்து விலகி இருக்கிறாராம். அதாவது, கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு சில பேர் ஒரு வேலை நயன்தாரா போட்ட கண்டிஷன் ஒத்துழைப்பு தராததால் தான் நயன்தாரா அந்த படத்தில் விலகி இருப்பதாக கூறி வருகிறார்கள்.

nayanthara - updatenews360.jpg 2

அப்படி 20 கிலோமீட்டர் தூரத்தில் தான் படப்பிடிப்பு இருக்க வேண்டும். வெளிநாடு ஷூட்டிங் இருந்தால் வரமாட்டேன் என்றும், பல கண்டிஷன்களை போடுவாராம். அதற்காக, உள்ளூரிலே செட்டு போட்டு தயாரிப்பாளர்கள் எடுத்தும் வருகிறார்கள். இந்த கண்டிஷனுக்கு எல்லாம் ஒற்றுக்கொள்ளவில்லை என்பதால், தான் நயன்தாரா படத்திலிருந்து விலகி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தற்போது, நயன்தாராவுக்கு பதில் அந்த படத்தில் நடிகை சமந்தாவை நடிக்க வைக்க படக்குழு பேச்சு வார்த்தைகள் நடத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கெளதம் மேனன் இயக்கத்தில் சமந்தா விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்