ரகசிய உறவில் நாக சைதன்யா… யாரு கூட யாரு போனா எனக்கென்ன? கொந்தளித்த சமந்தா..!
Author: Vignesh4 April 2023, 2:30 pm
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையான சமந்தா மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
அதையடுத்து தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இருவருக்கு ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். இதற்கு காரணமே ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் சர்ச்சையான படுக்கையறை காட்சிகளில் நடித்தது தான் என கூறப்பட்டது.
இதனிடையே அவர் திடீரென மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். உடல் நலம் தேறியதும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் நாக சைதன்யா ரூ. 15 கோடிக்கு புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளதாக நம் இணையதள செய்தியில் பார்த்தோம். தற்போது கிடைத்துள்ள புதிய தகவலின் படி அந்த வீடு சமந்தா வீட்டின் அருகிலேயே தான் இருக்கிறதாம்.
இதை அறிந்த ரசிகர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாக சைதனையாவுக்கு சமந்தா மீது இருக்கும் காதால் இன்னும் அப்படியே தான் இருக்கு. அவரை அருகில் இருந்தது பார்ப்பதற்காக தான் சமந்தா வீடு பக்கத்திலே வீடு வாங்கிருக்கிறார் என கூறி வருகிறார்கள்.
அதுமட்டும் அல்லாமல் விவாகரத்து ஆன பிறகு கூட நாக சைதன்யா இன்னுமும் சமந்தா உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் இருந்து நீக்கவே இல்லை என்பது அவர்கள் காதல் இன்னுமும் வாழ்வதற்கு அடையாளம்.
இதனிடையே, சமீபத்தில் நாக சைதன்யா சோபித துலிபாலாவை டேட்டிங் செய்வதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்தது.
இந்நிலையில் “யார் யாருடன் உறவில் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு ஒன்றும் கவலை இல்லை. அந்த பெண் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்” என்று சமந்தா கூறியதாக பத்திரிகையில் செய்திகள் வந்துள்ளது.
இது குறித்து சமந்தா, “நான் இது போன்று சொல்லவில்லை” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனால் இருவரது ரசிகர்களும் அவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள் என நம்பியுள்ளனர்.