ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.. நாக சைதன்யா 2வது திருமணம் குறித்து பதிலடி கொடுத்த சமந்தா!
Author: Udayachandran RadhaKrishnan6 February 2025, 1:11 pm
தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் 4 வருடத்தில் இந்த ஜோடி பிரிந்தது.
இருப்பினும் தனது கேரியரில் கவனம் செலுத்திய சமந்தா தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் மயோசிடைஸ் நோயால் அவதிப்பட்ட சமந்தா, அதில் இருந்து குணமாகி மீண்டும் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதையும் படியுங்க: இரண்டு ‘ஹாலிவுட்’ படத்தின் காப்பி…பட்டி டிங்கரிங் செய்யப்பட்டதா விடாமுயற்சி..!
மறுபக்கம் நாக சைதன்யா, நடிகை ஷோபிதாவை காதலித்து இரண்டாவதாக திருமணமும் செய்தார். இது சமந்தா ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தினாலும், சமந்தா இது குறித்து எதுவுமே பேசவில்லை.
நாக சைதன்யா 2வது திருமணம் : சமந்தா பதிலடி
இந்த நிலையில் நாக சைதன்யா இரண்டாவது திருமணம் குறித்து சமீபத்திய பேட்டியில் சமந்தாவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த திருமணத்தை பார்த்து பொறாமையா என கேட்டுள்ளனர்.
அதற்கு சமந்தா அளித்த பதிலில், ஐயையோ அப்படி எல்லாம் எதுவும் இல்லை, நான் எப்போதும் பொறாமையிடம் இருந்து விலகி இருப்பவள், இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
மோசமான விஷயங்களில் பொறாமையும் ஒன்று, என்னிடம் அதற்கு இடமில்லை என கூறிய சமந்தா, நாக சைதன்யா திருமணம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
அதே போல ஒரு பெண் திருமணமாகி குழந்தை பெற்றிருந்தால் முழுமையானவளாக பார்க்கிறார்கள், அது தவறு, பெண்ணுக்கு விதிக்கப்படும் தரநிலைகளை அவள் பூர்த்தி செய்யவில்லை என்றாலும் மகிழ்ச்சியாக, செழிப்பாகவும் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என பதிலடி கொடுத்துள்ளார்.