கேமரா முன் வரவே பயந்து நடுங்கிய சமந்தா – வீடியோவை பார்த்து வருந்தும் ரசிகர்கள்!

Author: Shree
7 April 2023, 6:14 pm

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கும் நடிகை சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.

தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது அவரது நடிப்பில் உருவாகியுள்ள சகுந்தலம் திறம் வருகிற 14ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரமோஷனில் முழு வீச்சில் இறங்கியுள்ள சமந்தா தற்போது மீடியாக்களை சந்தித்தார். அப்போது அங்கு சூழ்ந்த கேமராமேன்கள் பிளாஷ் லைட் போட்டு போட்டோ எடுத்ததால் கண்ணு கூசியுள்ளது. இதனால் சமந்தா படபடவென பயந்து வேகமாக சென்ற வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?