இவ்வளவு மோசமாக நடித்திருந்தேன்.. சமந்தா வேதனை!

Author: Hariharasudhan
5 March 2025, 12:41 pm

தான் நடித்த படங்களை திரும்பிப் பார்க்கும்போது இவ்வளவு மோசமாகவும் நடித்திருக்கிறேன் எனத் தோன்றியது என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.

சென்னை: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழும் நடிகை சமந்தா சினிமாவில் ஜொலித்து 15 வருடத்தை நிறைவு செய்​துள்​ளார். இதற்​காக சென்னை​யில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில், நடிகை சமந்தா கலந்து கொண்டு தனது நடந்த 15 ஆண்டு கால சினிமா வாழ்க்கை குறித்து உணர்ச்சி பொங்கப் பேசினார்.

மேலும் சமந்தா பேசுகையில், “எனது முதல் படமான மாஸ்​கோ​வின் காவிரி படத்தில் எனது நண்​பர் ராகுல் ரவீந்​தரனுடன் நடித்​தேன். அந்தப் படம் பற்​றிய நினை​வு​கள் அதிகம் இல்​லை. ஆனால், அடுத்த படமான ‘யே மாயா சேசவே’ (விண்​ணைத் தாண்டி வரு​வாயா படத்தின் தெலுங்கு வெர்ஷன்) படத்​தின் ஒவ்​வொரு ஷாட்​டும் இப்​போதும் நினை​வில் இருக்​கிறது.

சினி​மா​வில் 15 வருடங்​கள் என்​பது மிக நீண்ட காலம். இப்​போது நான் நடித்த சில படங்களைப் பார்க்​கும்​போது, இவ்​வளவு மோச​மாகவா நடித்​திருக்​கிறேன் எனத் தோன்றுகிறது. ஆனால், நான் அப்​படித்​தான் கற்​றுக்​ கொண்​டேன். எனக்கு சினி​மா​வில் வழி​காட்டுவதற்கு யாரு​ம் இல்​லை. ஏன், வேறு மொழிகள் கூட தெரி​யாமல்​தான் இருந்தேன்.

Samantha Ruth Prabhu

எல்​லா​வற்​றை​யும் புதி​தாக கற்​றுக்​கொள்ள வேண்​டி​யிருந்​தது. எனக்கு சினி​மா​வில் நண்பர்​கள் இல்​லை, தொடர்​புகள் இல்​லை, உறவினர்​கள் இல்​லை. எனவே, எனக்கு எல்​லாம் புதி​தாக இருந்​தது, பிறகு வேலை​யைக் கற்​றுக் கொண்​டேன். இந்த 15 வருடங்​கள் கற்​றுக்கொள்​ளும் அனுபவ​மாக மட்டுமே இருந்​தது.

இதையும் படிங்க: ஏலகிரியில் திருமணம், ஊட்டியில் தேன்நிலவு : மோகம் முடிந்ததும் காதல் மனைவியை கைவிட்ட இன்ஸ்டா காதலன்!

இப்​போது என் பலம், பலவீனம் தெரி​யும் என்​ப​தால், அடுத்த 15 வருடத்தை ஆவலாக எதிர்பார்க்​கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இறுதியாக, சமந்தா நடிப்பில் சிட்​டாடல்: ஹனி பன்னி என்ற வெப் தொடர் கடந்த ஆண்டு வெளி​யானது. இதனையடுத்​து, ‘மா இண்டி பங்​காரம்’ என்ற தெலுங்கு படத்​தைத் தயாரித்து நடித்து வரு​கிறார். மேலும், மயோசிடிஸ் நோயால் பாதிக்​கப்​பட்​டிருந்த அவர், இப்​போது அதிலிருந்து மீண்டு சினிமா​வில் கவனம் செலுத்தி வரு​கிறார்.

  • Anitha Vijayakumar Viral Video நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!
  • Leave a Reply