தான் நடித்த படங்களை திரும்பிப் பார்க்கும்போது இவ்வளவு மோசமாகவும் நடித்திருக்கிறேன் எனத் தோன்றியது என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.
சென்னை: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழும் நடிகை சமந்தா சினிமாவில் ஜொலித்து 15 வருடத்தை நிறைவு செய்துள்ளார். இதற்காக சென்னையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில், நடிகை சமந்தா கலந்து கொண்டு தனது நடந்த 15 ஆண்டு கால சினிமா வாழ்க்கை குறித்து உணர்ச்சி பொங்கப் பேசினார்.
மேலும் சமந்தா பேசுகையில், “எனது முதல் படமான மாஸ்கோவின் காவிரி படத்தில் எனது நண்பர் ராகுல் ரவீந்தரனுடன் நடித்தேன். அந்தப் படம் பற்றிய நினைவுகள் அதிகம் இல்லை. ஆனால், அடுத்த படமான ‘யே மாயா சேசவே’ (விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷன்) படத்தின் ஒவ்வொரு ஷாட்டும் இப்போதும் நினைவில் இருக்கிறது.
சினிமாவில் 15 வருடங்கள் என்பது மிக நீண்ட காலம். இப்போது நான் நடித்த சில படங்களைப் பார்க்கும்போது, இவ்வளவு மோசமாகவா நடித்திருக்கிறேன் எனத் தோன்றுகிறது. ஆனால், நான் அப்படித்தான் கற்றுக் கொண்டேன். எனக்கு சினிமாவில் வழிகாட்டுவதற்கு யாரும் இல்லை. ஏன், வேறு மொழிகள் கூட தெரியாமல்தான் இருந்தேன்.
எல்லாவற்றையும் புதிதாக கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. எனக்கு சினிமாவில் நண்பர்கள் இல்லை, தொடர்புகள் இல்லை, உறவினர்கள் இல்லை. எனவே, எனக்கு எல்லாம் புதிதாக இருந்தது, பிறகு வேலையைக் கற்றுக் கொண்டேன். இந்த 15 வருடங்கள் கற்றுக்கொள்ளும் அனுபவமாக மட்டுமே இருந்தது.
இதையும் படிங்க: ஏலகிரியில் திருமணம், ஊட்டியில் தேன்நிலவு : மோகம் முடிந்ததும் காதல் மனைவியை கைவிட்ட இன்ஸ்டா காதலன்!
இப்போது என் பலம், பலவீனம் தெரியும் என்பதால், அடுத்த 15 வருடத்தை ஆவலாக எதிர்பார்க்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இறுதியாக, சமந்தா நடிப்பில் சிட்டாடல்: ஹனி பன்னி என்ற வெப் தொடர் கடந்த ஆண்டு வெளியானது. இதனையடுத்து, ‘மா இண்டி பங்காரம்’ என்ற தெலுங்கு படத்தைத் தயாரித்து நடித்து வருகிறார். மேலும், மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இப்போது அதிலிருந்து மீண்டு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழகத்தில் சில கல்வி நிறுவனங்கள் சாதி பெயர்களில் செயல்பட்டு வருகிறது. அந்த கல்வி நிறுவனம் பயன்படுத்தும், வாகனம், கல்வி வளாகத்தில்…
ஜூனியர் நடிகர்களின் வேதனை ஒரு திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால் அதில் பல ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் இருப்பார்கள். அவர்கள் இடம்பெறும் காட்சிகள்…
கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பாராமெடிக்கல் சயின்ஸ்…
சேலம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதையும் படியுங்க: ஆட்சியில்…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இத்திரைப்படம்…
டாப் நடிகை தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா தற்போது தென் இந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.…
This website uses cookies.