ப்பா.. பயமா இருந்துச்சு.. சூர்யாவுடன் அதை செய்ய ஷாக் ஆகி போன பிரபல நடிகை..!

Author: Vignesh
7 May 2024, 3:16 pm

பிரபல நடிகர் சிவகுமார் அவர்களின் மூத்த மகனான சூர்யா தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். ஆரம்பித்தில் டபுள் ஹீரோ சப்ஜெக்ட், துணை ஹீரோ போன்ற திரைக்கதைகளில் நடிக்கத் தொடங்கிய இவர், நந்தா, காக்க காக்க, பிதாமகன், மௌனம் பேசியதே போன்ற படங்களின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

surya

விஜய், அஜித் இணையாக போட்டியாக வலம் வரும் சூர்யா, வாரணம் ஆயிரம், அயன், சிங்கம், மாற்றான் போன்ற திரைப்படங்கள் மூலம் செம பிரபலம் அடைந்தார். குறிப்பிட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர், சமீபத்தில் நடித்து வெளியான ஜெய் பீம், சூரரை போற்று போன்ற படங்கள் இவரை இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது.

செலக்ட்டீவான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சூர்யா தற்போது, இயக்குனர் சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். கற்பனை கதைக்கொண்ட வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டு வரும் இத்திரைப்படத்தில் திஷா பட்டாணி, யோகி பாபு, நடராஜன், ரெடின், கோவை சரளா, ரவிக்குமார் என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகின்றனர்.

suriya-kanguva-1-updatenews360

பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இத்திரைப்படமானது வருகிற ஏப்ரல் 11ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்னர் கங்குவா படத்தின் முழு அவுட்டையும் பார்த்த சூர்யா “மிகுந்த திருப்தி அடைந்திருப்பதாக” தெரிவித்திருந்தார். இந்நிலையில் கங்குவா படத்திற்காக சூர்யா வாங்கியுள்ள சம்பளம் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சுமார் ரூ. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தில் நடிக்க சூர்யா ரூ. 30 கோடி முதல், ரூ. 40 கோடி சம்பளம் வங்கியுள்ளாராம். அதுமட்டுமின்றி படம் வெளிவந்து ஹிட் அடித்த பிறகு லாபத்தின் ஒரு பகுதியை ஷேர் வாங்குவார் என கூறப்படுகிறது.

suriya

தற்போது கூற வரும் விஷயம் என்னவென்றால், கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா சமந்தா நடிப்பில் 24 படம் வெளியானது. இந்த படத்தில், சூர்யா சமந்தாவின் கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 24 படம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், சூர்யா ரசிகர்கள் நேற்று அதை கொண்டாடியிருந்தனர். இந்நிலையில், அப்படத்தினை பற்றிய ஒரு சம்பவத்தை நடிகை சமந்தா அந்த சமயத்தில் பேட்டி ஒன்றில் பகிர்ந்து உள்ளார்.

suriya

அதாவது, காலையில் எடுக்கப்பட்ட ரொமான்டிக் பாடல் ஒன்றில் இணைந்து சூர்யாவுடன் டூயட் ஆடியதாகவும், மதியம் ஆத்ரேயா-வாக வந்து மிரட்டியதாகவும் அதைக் கண்டு ஒரு நிமிடத்தில் தான் பயந்துவிட்டதாகவும், அதை பார்த்து உண்மையில் பயந்துவிட்டதாகவும் சமந்தா தெரிவித்து இருக்கிறார். மேலும் சூர்யாவுடன் அதன் பின்னர் எடுக்கப்பட்ட காட்சியில் நடிக்கவே பயமாக இருந்தது என்று சமந்தா தெரிவித்துள்ளார். படம் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Allu Arjun arrest and controversy பூகம்பமாய் வெடிக்கும் அல்லு அர்ஜுன் பிரச்சனை…வீட்டின் முன்பு கலவரம்…கண்டுகொள்ளாத போலீஸார்..!
  • Views: - 274

    0

    0