விரைவில் இரண்டாம் திருமணம்…? காதலனின் Propose’க்கு சமந்தா சம்மதம்!

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் நட்சத்திர நடிகையாகும் அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.

நடிகை சமந்தா ஹே மாயா சேஷாவே திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அப்படத்தின் இளம் ஹீரோவாக நடித்த நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வந்தார். கிட்டத்தட்ட 8 வருடங்களாக இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்த திருமணத்திற்கு பிறகு மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்த இந்த ஜோடி நான்கு வருடத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். ரசிகர்களின் பேவரைட் ஜோடியாக பார்க்கப்பட்ட இவர்களின் விவாகரத்து அவர்களின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது.

இன்று வரை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சமந்தா திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடிக்க ஆரம்பித்து பாலிவுட் சினிமாவிலும் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். இப்படியான சமயத்தில் நாக சைதன்யா பிரபல நடிகையான சோபிதா துலிபாலாவை ரகசியமாக சில வருடங்கள் டேட்டிங் செய்து காதலித்து வந்தார்.

அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான போதிலும் நாங்கள் காதலிக்கவில்லை என மறுத்தனர். பின்னர் திடீரென கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி இவர்களின் நிச்சயதார்த்தம் நாகார்ஜுனாவின் வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் இரு வீட்டாரின் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது நாக சைதன்யா மற்றும் சோபிதா இவர்களின் திருமண நிச்சயதார்த்த நாளில் ரசிகர் ஒருவர் நடிகை சமந்தாவுக்கு காதல் ப்ரபோஸ் செய்து வீடியோ ஒன்றை instagram-ல் வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்த நடிகை சமந்தா வீடியோவின் பின்னணியில் உள்ள உடற்பயிற்சி கூடம் கிட்டத்தட்ட என்னை சம்மதிக்க வைக்கிறது என ரிப்ளை செய்திருக்கிறார். அவரின் அந்த பதிலுக்கு ஏகப்பட்ட லைட்ஸ் குவிந்து வருகிறது. இதன் மூலம் நடிகை சமந்தா தற்போது தான் உடற்பயிற்சி மற்றும் நடிப்பு போன்றவற்றில் அதிக ஆர்வம் மற்றும் கவனத்தை செலுத்தி வருவதாக வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

Anitha

Recent Posts

சூர்யாவை பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- பொதுமேடையில் விஜய்யை வம்பிழுத்த பிரபலம்!

கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

1 day ago

ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…

கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…

2 days ago

அதிகமான பாஜக எம்எல்ஏக்கள் இந்த முறை சட்டமன்றம் செல்வோம் : வானதி சீனிவாசன் உறுதி!

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…

2 days ago

நீங்க பேசாம சிம்புவை கல்யாணம் பண்ணிக்கோங்க… திரிஷாவுக்கு வந்த திடீர் கோரிக்கை!

நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…

2 days ago

விஜய் ஆபாச பட நடிகர்.. அவர் தந்தை ஆபாச பட இயக்குநர்.. குடும்பமே : சர்ச்சையை கிளப்பிய திமுக பேச்சாளர்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…

2 days ago

போலீஸ் ரைடுக்கு பயந்து தப்பியோடிய அஜித் பட நடிகரை வளைத்து பிடித்த போலீஸார்! விசாரணை கெடுபிடி…

ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…

2 days ago

This website uses cookies.