நம்பிக்கை தந்த முன்னணி நடிகை; பதில் சொன்ன நாகினி – வைரலாகும் பதிவு..

Author: Sudha
5 July 2024, 9:57 am

நாகினி நடிகை ஹினா கான் குறித்து வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவரே தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தனக்கு ஸ்டேஜ் 3 மார்பக புற்றுநோய் இருப்பதாகவும், நான் மீண்டு எழுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

https://www.instagram.com/reel/C844rlVIgcl/?utm_source=ig_web_copy_link

ஒரு விருது வழங்கும் விழாவிற்கு சென்று விட்டு நேரடியாக மருத்துவமனைக்கு செல்லும் ஒரு வீடியோவை பதிவிட்டு என்னுடைய முதல் கீமோ என பதிவிட்டிருந்தார்.

நடிகை சமந்தா மியோசிடிஸ் என்னும் மிக அரிதான தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டு தற்போது மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமந்தா 3 நாட்களுக்கு முன்பு ஹினாகானின் வீடியோவை பகிர்ந்து ‛‛நீங்கள் ஒரு போராளி. உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்” என்று அவருக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் சில வாசகங்களை பதிவிட்டிருந்தார்.

அதற்கு நன்றி தெரிவித்த ஹினா கான், ‛‛நீங்கள் ஒரு மிகப்பெரிய நட்சத்திரம். உங்கள் மீது வீசப்பட்ட அனைத்து துன்பங்களையும் பிரச்னைகளையும் நீங்கள் எதிர் கொண்டவிதம் வியப்பில் ஆழ்த்துகிறது. உங்களது அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி. நான் கண்டிப்பாக இந்த நோயிலிருந்து மீண்டு வருவேன்” இது உறுதி என்று பதிவிட்டு இருக்கிறார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 149

    0

    0