ரிலீசுக்கு முன் ‘சாகுந்தலம்’ படத்தின் முதல் விமர்சனம்: எப்படி இருக்கு கலக்கலா?… சொதப்பலா?…

Author: Vignesh
15 March 2023, 2:45 pm

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான தெலுங்கில் Ye Maaya Chesave மற்றும் தமிழில் விண்ணைதாண்டி வருவாயா திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சமந்தா.

முன்னதாக நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, கணவரை கடந்த 2021ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இவர்களுடைய விவாகரத்து காரணம் என்ன என்பது குறித்து பல வதந்திகள் வெளிவந்தது

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சமந்தா, மையோசிட்டிஸ் என்ற நோயால் அவதிப்பட்டு தற்போது அதற்கு சிகிச்சை மேற்கொண்டு உடல்நிலை தேறி வருவதாக கூறப்படுகிறது.

samantha - updatenews360

இந்நிலையில், சமந்தா நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள சாகுந்தலம் திரைப்படம். இந்த சரித்திர படத்தின் கதையின் நாயகியாக சமந்தா நடித்துள்ளார்.

இப்படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக நடிகர் தேவ் மோகன் என்பவர் சகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மேலும், மோகன் பாபு, பிரகாஷ் ராஜ், அதிதி பாலன், கவுதமி என பல நட்சத்திரங்கழும் சகுந்தலம் படத்தில் நடிக்கிறார்கள்.

samantha - updatenews360

சகுந்தலம் படத்தின் ட்ரைலர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படம் கடந்த பிப்ரவரி 17ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், திடீரென மாற்றப்பட்டு ஏப்ரல் 14ஆம் தேதி தான் சாகுந்தலம் திரைப்படம் வெளியாகும் என அறிவித்தனர்.

இந்நிலையில், சாகுந்தலம் படத்தை பார்த்துவிட்ட சமந்தா அப்படம் குறித்து தன்னுடைய நெகிழ்ச்சியான விமர்சனத்தை தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

samantha - updatenews360

இறுதியாக தான் படத்தை பார்த்துவிட்டேன் என்றும், இயக்குனர் குணசேகருக்கு நன்றி எனவும், இப்படியொரு அழகிய படத்தை தனக்கு கொடுத்ததற்கும், குடும்ப ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடுவதை பார்க்க ஆவலுடன் இருப்பதாகவும், நீங்கள் அனைவரும் தங்களுடைய மேஜிக்கல் உலகத்தை கண்டிப்பாக கண்டு ரசிப்பீர்கள் எனவும், தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் நீலிமாவிற்கு நன்றி எனவும், சாகுந்தலம் திரைப்படம் என்றும் தன்னுடைய மனதிற்கு நெருக்கமான ஒரு படம் என்று தெரிவித்துள்ளார்.

சாகுந்தலம் படம் குறித்து சமந்தா வெளியிட்டுள்ள இந்த பதிவு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தத்தில் சகுந்தலம் படம் குடும்ப ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என பேசப்பட்டு வருகிறது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 566

    0

    0