திருமணமான நடிகருடன் நெருக்கம் காட்டும் சமந்தா.. வைரலாகும் போட்டோஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
1 November 2024, 1:36 pm

நடிகை சமந்தா வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரளயம் ஏற்பட்டது. காதல் திருமணத்தில் பிரிவு, அரிய வகை நோய் என அடுத்தடுத்து பேரிடராக அமைந்தது.

மீண்டும் சமந்தா கம்பேக் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் யாரும் எதிர்பாரா விதமாக சினிமாவுக்கு திடீர் பிரேக் போட்டார்.

பின்னர் உடல்நலத்தில் கவனம் செலுத்தி முழுமையாக குணமடைந்த தற்போது தான் சினிமா விழாக்களில் தலையை காட்ட ஆரம்பித்துள்ளார்.

இதையும் படியுங்க: பிரபல நடிகரின் மகன் விபத்தில் மரணம்… தீபாவளி இரவில் சோகம்!

கடந்த 2022ல் வெளியான சிட்டாடல் வெப் சீரியஸ் தொடரின் அடுத்தபாகமாக உருவாகியுள்ளது சிட்டாடல் ஹனி பன்னி தொடர்.

வரும் நவம்பர் 7ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. இந்த வெப் சீரியசின் ட்ரெய்லர் சில தினத்திற்கு முன் வெளியானது.

இதில் நடித்துள்ள நடிகை சமந்தா அதிரடியாக மிரட்டியுள்ளார். கையில் துப்பாக்கியுடன் ரகசிய ஏஜெண்டாக இருந்ததாக தனது மகளிடம் கூறுவது போல காட்சிகள் இருந்தன. அதே சமயம் ஆக்ஷினி அதிரடி காட்டியுள்ளார் சமந்தா.

மேலும் வருண் தவானை காதலிப்பது போலவும் காட்சிகள் இருந்தன. அதுவும் நெருக்கமான காட்சிகள் இருவருக்கும் அமைந்துள்ளன.

வருண் தவான் மற்றும் சமந்தா ஜோடியின் கெமிஸ்ட்ரி இந்த படத்தில் நல்லா ஒர்க் அவுட் ஆகியுள்ளதாக ரசிகர்கள் இப்பவே அதகளப்படுத்தி வருகின்றனர். இந்த ஜோடி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ