ஹீரோக்களுக்கு போட்டியாக வெறித்தனமாக ஒர்கவுட்.. சிக்ஸ் பேக் புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா..!

Author: Vignesh
20 March 2023, 3:15 pm

மாநாடு படத்தில் எஸ். ஜே சூர்யா சொல்வது போல், சமந்தா வந்தார், நடித்தார், முதலிடத்தை பிடித்தார், முதலிடத்தில் இருக்கிறார், Repeatu. இந்த வளர்ச்சி எப்போது நடந்தது திட்டவட்டமாகத் தெரியவில்லை. எந்தப் படத்தின் மூலம் இவருக்கான அங்கீகாரம் இவ்வளவு தூரம் கிடைத்தது என்றும் தெரியவில்லை.

ஆனால் காத்துவாக்குல இரண்டு காதல் படம் ரிலீஸான பிறகு சென்னை முழுக்க கதீஜா பற்றிய பேச்சுதான். 2010- ல் மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், தற்போது சம்மு குட்டி விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் இவரின் நடிப்புக்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள்.பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன், இருவரும் தன்னுடைய விவாகரத்தை அறிவித்தனர்.

samantha - updatenews360

விவாகரத்துக்கு பின் பல மாதங்களாக சமந்தா மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் கடுமையான வலியும் கஷ்டத்தையும் சந்தித்து வந்தார். சிகிச்சைக்கு பின் தற்போது மீண்டு வரும் சமந்தா இந்தி வெப் தொடரில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சமந்தா மயோசிட்டிஸ் நோயில் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த பின்னர் ஜிம் ஒர்கவுட் செய்யும் புகைப்படங்களை அதிகமாக பதிவு செய்து இருந்தார்.

அந்த வகையில், இன்று சிக்ஸ் பேக் ஒர்கவுட் செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த நிலையில், இந்த பதிவிற்கு பிரபல நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங் ‘சூப்பர் கூல்’ என்றும் ஸ்ரேயா ‘ Strong girl’ என்றும் பதிவு செய்துள்ளனர்.

samantha - updatenews360

சமந்தாவின் இந்த சிக்ஸ் பேக் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 549

    2

    0