தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. நாக சைதன்யாவை விவாகரத்து செய்துவிட்டு படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்த சமந்தா மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிகப்பட்டார்.
இதனால் கடந்த பல மாதங்களாக உயிருக்கு போராடி நடக்கக்கூட முடியாமல் அவதிப்பட்டு வருகிறேன் என்று சமந்தா கூறியிருந்தார். இதற்காக கடினமான சிகிச்சையையும் மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது. விரைவில் தென் கொரியா சென்று சிகிச்சை பெற்று ஜனவரி மாதம் குஷி மற்றும் பாலிவுட் படத்தின் வேலைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்காக ஒரு மாதத்திற்கு மேல் சிகிச்சை பெற்று அதிலிருந்து படிப்படியாக மீண்டு வந்த சமந்தா, தனது யசோதா படத்தின் புரமோஷனுக்காக கடந்த நவம்பர் மாதம் சில பேட்டிகளையும் கொடுத்தார். அப்போது அந்த நோய் பாதிப்பினால் தான் எதிர்கொண்ட கஷ்டங்கள் குறித்து கண்ணீர்மல்க பேசினார்.
இதையடுத்து கடந்த நவம்பர் 11-ந் தேதி யசோதா படம் வெளியாகி வெற்றியடைந்தது. நடிகை சமந்தா இந்த வெற்றியைக் கூட கொண்டாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார், உடல்நிலை மோசமானதால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தென் கொரியாவுக்கு சென்று சிகிச்சை எடுக்க உள்ளதாகவும் தகவல் கசிந்தது.
மயோசிடிஸ் என்கிற அரியவகை நோய் பாதிப்பின் காரணமாக சமந்தா நடிக்க கமிட் ஆகி இருந்த சில பட வாய்ப்புகளும் அவரைவிட்டு நழுவிச் சென்றன. இவ்வாறு 2022-ம் ஆண்டின் கடைசி சில மாதங்கள் சமந்தாவுக்கும் மிகவும் கடினமான ஒன்றாக இருந்து வந்த நிலையில், தற்போது சமந்தா புத்தாண்டு பிறந்துள்ள வேளையில் குட் நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளார்.
அது என்னவென்றால், சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள சாகுந்தலம் என்கிற திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கப்பட்டு உள்ளது. காவிய காதல் படமான இதில் நடிகை சமந்தாவுக்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்துள்ளார்.
சாகுந்தலம் படத்தை குணசேகர் இயக்கி உள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாலம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வருகிற பிப்ரவரி மாதம் 17-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமந்தாவுக்கு இந்தப்படமும் வெற்றிப்படமாக அமைய வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் சில கல்வி நிறுவனங்கள் சாதி பெயர்களில் செயல்பட்டு வருகிறது. அந்த கல்வி நிறுவனம் பயன்படுத்தும், வாகனம், கல்வி வளாகத்தில்…
ஜூனியர் நடிகர்களின் வேதனை ஒரு திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால் அதில் பல ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் இருப்பார்கள். அவர்கள் இடம்பெறும் காட்சிகள்…
கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பாராமெடிக்கல் சயின்ஸ்…
சேலம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதையும் படியுங்க: ஆட்சியில்…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இத்திரைப்படம்…
டாப் நடிகை தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா தற்போது தென் இந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.…
This website uses cookies.