தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவரும் நடிகை சமந்தா டோலிவுட்டில் இளம் நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஒன்றாக சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
இதனிடையே இருவருக்கும் ஏற்பட்ட வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்கள். சமந்தா பிரிந்த பிறகு சமந்தா மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் அதிக அளவில் பாதிக்கப்பட்டார் மயோசிட்டிஸ் என்ற தசை அயர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா அந்த நோயும் தாக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள பல்வேறு சிகிச்சைகளை எடுத்துக் கொண்டார் .
ஆனாலும், அதில் அவர் பூரண குணம் அடையவில்லை. அந்த மருந்துகள் அந்த நோயின் பாதிப்பால் பல்வேறு பக்க விளைவுகளை சந்தித்து இருக்கிறார். சமீபத்தி பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை சமந்தா மயோசிட்டிஸ் நோயால் தான் பாதிக்கப்பட்ட போது ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அது ரசிகர்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஆம் அதாவது, மையோ சிட்டிஸ் நோயின் தாக்கத்தால் பல விஷயங்களை மறந்து விட்டேன். ஞாபக மறதியால் ரொம்பவே நான் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தேன். அவ்வளவு ஏன் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கூட இதுவரை யாரும் வந்ததில்லை.
இதையும் படியுங்கள்: பிக்பாஸில் இருந்து வெளியேறிய அர்னவ்… குஷியில் குத்தாட்டம் போட்ட Ex மனைவி – வீடியோ !
அழைத்தும் சென்றதில்லை என்பதை நினைத்து நான் ரொம்ப வருத்தப்பட்டு உள்ளேன் என சமந்தா கூறி உள்ளார். ஒரு மிகப்பெரிய நட்சத்திர நடிகை கோடிகளில் சம்பளம் வாங்கும் ஹீரோயின் இப்படி இருக்கும்போது அவர்களது குடும்பத்தார் உறவினர்கள் நண்பர்கள் கூட அவருக்கு உறுதுணையாக இல்லையா? அந்த நேரத்தில் என கேள்வி எழுப்பி ரசிகர்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்ததோடு சமந்தாவிற்கு “Be strong sam”என கமெண்ட் செய்து வருகிறார்கள்.