அந்த படத்தின் முதல் சாய்ஸ் சூர்யா, சமந்தா இல்ல.. லட்டு போல் கிடைத்த வாய்ப்பை தவற விட்டுட்டாங்களே..!

Author: Vignesh
5 February 2024, 5:58 pm

தமிழ் சினிமாவில் அஞ்சான் திரைப்படத்தின் மூலமாக முதல் முறையாக சூர்யா மற்றும் சமந்தா இருவரும் ஜோடி சேர்ந்தனர். இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதைத்தொடர்ந்து, மீண்டும் இருவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் தான் 24. இந்த படத்தை விக்ரம் குமார் இயக்கி சூர்யாவின் 2D என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. சயின்டிஃபிக் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

surya -updatenews360

இந்நிலையில், முதன் முதலில் இப்படத்தில் நடிக்க இருந்தது நடிகர் சூர்யா கிடையாது. இப்படத்தின், கதையை முதலில் நடிகர் விக்ரமுக்கு தான் இயக்குனர் கூறியுள்ளார். ஆனால், விக்ரமால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதன் காரணமாக அதன் பின் சூரியாவிடம் கதையை கூறி ஓகே செய்துள்ளார்.

surya vikram

அதேபோல், தான் சமந்தா நடித்த கதாநாயகி கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது இலியானாவாம். ஆனால், அவர் திடீரென அப்படத்திலிருந்து வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக சமந்தாவை கமிட் செய்துள்ளனர் படக் குழு இந்த தகவல் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ileana d'cruz -updatenews360
  • Jana Nayakan Vijay ஜனநாயகன் கடைசி படம் அல்ல… சம்பவம் LOADING : இயக்குநரின் மாஸ் அறிவிப்பு!