“காதல்” என்றால் என்ன…? விட்டுட்டு போனதால் விரக்தி ஆனேனா? மனம் திறந்த சமந்தா!
Author: Shree28 March 2023, 7:59 pm
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையான சமந்தா மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
அதையடுத்து தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இருவருக்கு ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். இதற்கு காரணமே ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் சர்ச்சையான படுக்கையறை காட்சிகளில் நடித்தது தான் என கூறப்பட்டது.
இதனிடையே அவர் திடீரென மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். உடல் நலம் தேறியதும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது வெளியாகவுள்ள சாகுலத்தலம் படத்திற்காக ப்ரோமோஷனாக பேட்டிகள் கொடுத்து வருகிறார்.
அப்படி சமீபத்திய பேட்டி ஒன்றில், விவாகரத்துக்கு பிறகு ‘லவ்’ என்பதற்கு என்ன அர்த்தம் மாறி இருக்கிறதா? என்ற கேள்விக்கு, என்னை பொறுத்தவரை அப்படியில்லை “லவ் என்பது ஒரு ஆண்-பெண் இடையே தான் என்றில்லை. தற்போது லவ் என்றால் என் நண்பர்கள், கடந்த 8 மாதங்களாக என் அருகில் இருந்து அவர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். “நானும் அன்பை கொடுக்கிறேன். அதிகம் loving ஆக தான் இருக்கிறேன். ஒரு ரிலேஷன்ஷிப் தோல்வியில் முடிந்ததால் நான் நம்பிக்கை இல்லாத, கசப்பான ஒருவராக நான் மாறிவிடவில்லை” என சமந்தா கூறி இருக்கிறார்.